/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முருகப்பெருமானின் அபயம்! கந்தசஷ்டி இன்று ஆரம்பம்; விரதம் துவங்கும் பக்தர்கள்
/
முருகப்பெருமானின் அபயம்! கந்தசஷ்டி இன்று ஆரம்பம்; விரதம் துவங்கும் பக்தர்கள்
முருகப்பெருமானின் அபயம்! கந்தசஷ்டி இன்று ஆரம்பம்; விரதம் துவங்கும் பக்தர்கள்
முருகப்பெருமானின் அபயம்! கந்தசஷ்டி இன்று ஆரம்பம்; விரதம் துவங்கும் பக்தர்கள்
ADDED : நவ 01, 2024 10:52 PM

திருப்பூர் ; முருகபக்தர்கள் ஆறு நாட்கள் விரதமிருந்து வழிபடும், கந்தசஷ்டி விழா இன்று காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
முருகப்பெருமானுக்கு உகந்த கந்தசஷ்டி விழா, தீபாவளி பண்டிகைக்கு மறு நாள் துவங்கும். சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவம் என, விழா கோலாகலமாக நடக்கும். இந்தாண்டு, நேற்று அமாவாசை என்பதால், இன்று, பக்தர்கள் காப்புக்கட்டி, கந்தசஷ்டி விரதம் துவக்குகின்றனர்.
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், அபிேஷக ஆராதனையும், சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. வரும், 7ம் தேதி மாலை சூரசம்ஹார விழாவும், 8ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.
அலகுமலை முத்துக்குமாரசாமி கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் ஷண்முக சுப்பிரமணியர், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோவில் உட்பட, அனைத்து முருகன் கோவில்களிலும், இன்று கந்தசஷ்டி விரதம் காப்புக்கட்டும் நிகழ்வுடன் துவங்குகிறது.
இக்கோவில்களில், தினமும், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜை, யாகசாலை பூஜைகள் நடக்கும். வரும், 7ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, சூரசம்ஹாரம், 8ம் தேதி காலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவ விழா நடக்க உள்ளது.