/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடி மையத்தில் காத்திருக்கும் ஆபத்து
/
அங்கன்வாடி மையத்தில் காத்திருக்கும் ஆபத்து
ADDED : அக் 07, 2025 11:52 PM

திருப்பூர்; திருப்பூர், கொங்கு நகர் மெயின் ரோடு, ரங்கநாதபுரம் பகுதி அங்கன்வாடி மையத்தை, விரைவில் பராமரிக்க வேண்டுமென, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி, ரங்கநாதபுரம் பகுதியில், இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதற்கு அருகே, ரேஷன் கடை இருப்பதால், அங்கன்வாடி மையத்துக்குள் எலி தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
அங்கன்வாடி வளாகத்திற்குள், ஆங்காங்கே எலிகள் குழி தோண்டி வைத்துள்ளன. முறையான பராமரிப்பு இல்லாமல், வளாகத்திற்குள் செடிகள் முளைத்தும் காணப்படுகிறது. குழந்தைகள் வெளியே விளையாட அனுமதிக்க முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'இரண்டு மையங்களில், 55 குழந்தைகள் பயில்கின்றனர். கர்ப்பிணிகளும் வந்து இணை உணவு பெறுகின்றனர்.
வளாகமும், கட்டடம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. பழமையான கட்டடத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
மாநகராட்சி நிர்வாகம், அங்கன்வாடி மைய வளாகத்தில், சிமென்ட் தளம் அமைத்து கொடுக்க வேண்டும்,' என்றனர்.