/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யல் கரையில் எழுந்தருளிய பெருமாள் 'பந்தசேர்வை' எடுத்து அருளாடிய தாசர்கள்
/
நொய்யல் கரையில் எழுந்தருளிய பெருமாள் 'பந்தசேர்வை' எடுத்து அருளாடிய தாசர்கள்
நொய்யல் கரையில் எழுந்தருளிய பெருமாள் 'பந்தசேர்வை' எடுத்து அருளாடிய தாசர்கள்
நொய்யல் கரையில் எழுந்தருளிய பெருமாள் 'பந்தசேர்வை' எடுத்து அருளாடிய தாசர்கள்
ADDED : அக் 21, 2024 04:12 AM

திருப்பூர், : மங்கலம் ஊராட்சி, அக்ரஹாரப்புத்துார் மற்றும் வேட்டுவபாளையம் கருவேலாங்காடு (காட்டுக்கோவில்) பகுதியில், ஸ்ரீகாரணப்பெருமாள் கோவில்கள் உள்ளன.
ஆறு கிராமங்களை சேர்ந்த மக்கள் இணைந்து நடத்தும் திருக்கல்யாண உற்சவ விழா, ஐப்பசி முதல் சனிக்கிழமை நடந்து வருகிறது.
விழாவையொட்டி, கடந்த 18ம் தேதி, கொண்டி தீர்த்தம், பிறந்த வீட்டு சீர்வரிசை எடுத்துவரப்பட்டது. நேற்று முன்தினம் காலை, சாமளாபுரம் வரதராஜபெருமாள் கோவில் பட்டாச்சாரியார்கள் தலைமையில், ஸ்ரீதேவி பூதேவி சமேத காரணப்பெருமாளுக்கு, திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது.
நேற்று காலை, நொய்யல் கரையில், கருட வாகனத்தில் காரணப்பெருமாளும், ஸ்ரீதேவிபூதேவி சமேத காரணப்பெருமாள் தனி சப்பரத்திலும் எழுந்த ருளினர். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, தாசர்கள் பந்தசேர்வை எடுத்து ஆடினர். அருளாடிய தாசர்கள், 'கவாளம்' எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேற்று இரவு, 7:00 மணிக்கு, சுவாமிகள், வாண வேடிக்கையுடன், காட்டுகோவிலுக்கு புறப்பட்டன. இரவு, 10:00 மணிக்கு, ஹரிசேவையும், 'கவாள' பூஜையும் நடந்தது. ஊர்பொதுமக்கள், நல்லெண்ணெய், மாலைகள், தேங்காய் - பழம் ஆகியவை படைத்து, ஊர்வலமாக வந்த ஸ்ரீகாரணப்பெருமாளை வழிபட்டனர்.
இன்று காலை மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து, சுவாமிகள், காட்டு கோவிலில் இருந்து, வீட்டுகோவிலுக்கு வந்தடைவார்கள் என, விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

