/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொடிகட்டிப் பறக்கிறது 'டி.சி.சி., குரூப்' நிறுவனம்
/
கொடிகட்டிப் பறக்கிறது 'டி.சி.சி., குரூப்' நிறுவனம்
கொடிகட்டிப் பறக்கிறது 'டி.சி.சி., குரூப்' நிறுவனம்
கொடிகட்டிப் பறக்கிறது 'டி.சி.சி., குரூப்' நிறுவனம்
ADDED : ஆக 08, 2025 11:46 PM

உ லகம் முழுவதும் மூன்று வகை பிரின்டிங் மெஷின்களையும், 'இங்க்' ரகங்களையும் வழங்கி வருகிறது, கைராசியான டி.சி.சி., குரூப் நிறுவனம்.
'டி.சி.சி., குரூப்' நிறுவனத்தின் விற்பனை இயக்குனர் ஜெய்சங்கர் தங்கவேலு கூறியதாவது:
கடந்த, 47 ஆண்டுகளாக, பின்னலாடை பிரின்டிங் மெஷின்கள் விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது, 'டி.சி.சி., குரூப்' நிறுவனம். நவீன பிரின்டிங் மெஷின்கள் மட்டுமல்லாது, மும்பையில் தயாரிக்கும் உலகத்தரம் வாய்ந்த பிரின்டிங் இங்க் வகைகளையும் விற்பனை செய்து வருகிறோம்.
பிரின்டிங் மெஷின் மற்றும் 'இங்க்' வகைகளை, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறோம். சொந்தமாக தயாரிக்கும், 'ஸ்கிரீன்' பிரின்டிங் மெஷின்கள், 'டிஜிட்டல்' பிரின்டிங் மெஷின்கள், 'சப்ளிமேஷன்' பிரின்டிங் மெஷின்கள் ஆகியவற்றை, உலகம் முழுவதும் விற்பனை செய்துவருகிறோம்.
எங்கள் உற்பத்தி நிறுவனம், 2.40 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது; 300 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வழக்கமாக, பிரின்டிங் மெஷின் விற்பனையாளர், தொடர்ந்து சர்வீஸ் வழங்குவது வழக்கம். எங்களது நிறுவனம், மெஷின் சர்வீஸ் மட்டுமல்ல, 'பிரின்ட் அப்ளிகேஷன்' உதவியும் செய்து வருகிறது.
அதாவது, பிரின்ட் செய்வதில் ஏற்படும் குழப்பங்களுக்கும், எங்கள் குழுவினர், சிறப்பு தீர்வு வழங்கி வருகின்றனர். எங்களது, அதிநவீன பிரின்டிங் மெஷின்கள், உலகம் முழுவதும், 30க்கும் மேற்பட்ட நாடுகளில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு, 90470 43265, 89403 33265, 93630 21265 ஆகிய எண்களில் அணுகலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.