/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சியில் இடம்பெற்றும் தீரவில்லை குடிநீர் பிரச்னை
/
மாநகராட்சியில் இடம்பெற்றும் தீரவில்லை குடிநீர் பிரச்னை
மாநகராட்சியில் இடம்பெற்றும் தீரவில்லை குடிநீர் பிரச்னை
மாநகராட்சியில் இடம்பெற்றும் தீரவில்லை குடிநீர் பிரச்னை
ADDED : ஜூன் 12, 2025 12:32 AM

பொங்கலுார் : -பொங்கலுார் ஒன்றியத்தின் மிகச் சிறிய ஊராட்சியாக இருந்தது நாச்சிபாளையம். ஊராட்சியில், 2,000 பேர் வசித்து வந்தனர்.
கடந்த, 15 ஆண்டுகளில் மக்கள் தொகை 'ஜெட்' வேகத்தில் அதிகரித்துள்ளது. தற்போது, 30 ஆயிரம் பேர் வரை இப்பகுதியில் வசிப்பதாக தெரிய வருகிறது. எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் ஏராளமான வீட்டுமனைகள் அமைக்கப்பட்டன.
அடிப்படை வசதிகள் இன்றி வீட்டுமனைகளை மக்கள் வாங்கி விட்டனர். தவணை பணம் கட்டியும் கூட சிலருக்கு வீடு கிரயம் செய்யப்படாமல் இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. பொதுமக்கள் வீட்டு வரி ரசீது, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு பெறுவது உள்ளிட்டவற்றில் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
சில வீதிகளில் மக்கள் நடக்கக்கூட முடியாத நிலை உள்ளது. அத்திக்கடவு குடிநீர், 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட திட்டம். இதில், 2,000 பேருக்கு மட்டுமே குடிநீர் வழங்க முடியும். தற்போதைய மக்கள் தொகைக்கு குடிநீர் வழங்குவது சாத்தியம் இல்லாதது. பலரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மக்கள் மாதம் தோறும் பல ஆயிரம் ரூபாயை குடிநீருக்கே செலவிடுகின்றனர்.
அங்கு குடியிருக்கும் தொழிலாளர்களில் பலர் குறைந்த வருவாய் பெறுபவர்கள். குடிநீருக்கு கூடுதல் தொகை செலவிட முடியாது.
ஊராட்சியாக இருந்த நாச்சிபாளையம் தற்போது மாநகராட்சியாக மாறி உள்ளது. இருந்தும் அங்கு குடிநீர் பிரச்னை தீராத தலைவலியாக உள்ளது.
குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே நாச்சிபாளையம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.