/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டேபிள் டென்னிஸில் சாதித்த தி ஏர்னெஸ்ட் அகாடமி
/
டேபிள் டென்னிஸில் சாதித்த தி ஏர்னெஸ்ட் அகாடமி
ADDED : டிச 05, 2025 08:33 AM

திருப்பூர்: திருப்பூர் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகள் இடையே மாணவியர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டி, ஸ்ரீஷிவ் வித்யா மந்திர் பள்ளியில் நடந்தது.
இதில் பங்கேற்ற தி ஏர்னெஸ்ட் அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவியர் பல்வேறு போட்டிகளில் வென்றனர். தனிநபர் 19 வயதினர் பிரிவில் ப்ரீத்தி அசுன்தா முதலிடம்; 16 வயதினர் பிரிவில் ரிதன்யா மூன்றாம் இடம்; 14 வயதினர் பிரிவில் மானசி இரண்டாம் இடம்; 10 வயதினர் பிரிவில் மகாஸ்ரீ முதலிடம்; இரட்டையர் பிரிவு 19 வயதினர் பிரிவில் ப்ரீத்தி அசுன்தா, செரா ஜெப் முதலிடம்; 16 வயதினர் பிரிவில் ரிதன்யா, ரித்விகா முதலிடம்; 14 வயதினர் பிரிவில் மானசி, இனன்யா முதலிடம்; 10 வயதினர் பிரிவில் மகாஸ்ரீ, நிதன்யா முதலிடம் பெற்றனர்.
லிட்டில் ஸ்டார் பள்ளியில் நடந்த போட்டியில், மாணவர் தனிநபர் 19 வயதினர் பிரிவில் யுதிஷ்கிருஷ்ணா முதலிடம்; 12 வயதினர் பிரிவில் மயன்க் வர்மா இரண்டாம் இடம்; 10 வயதினர் பிரிவில் ரோஹித் மூன்றாம் இடம்; இரட்டையர் 19 வயதினர் பிரிவில் யுதிஷ் கிருஷ்ணா, தேவ் முதலிடம்; 16 வயதினர் பிரிவில் ஜான்ரயான், தக்சேஷ் 3ம் இடம்; 12 வயதினர் பிரிவில் அர்னவ்பன்சால், மயன்க்வர்மா மூன்றாம் இடம்; 10 வயதினர் பிரிவில் ரோஹித், யுவா முதலிடம் பெற்றனர்.
இவர்களை பள்ளி தாளாளர் சந்திரன், இயக்குனர் டோரத்தி ராஜேந்திரன், முதல்வர் லலிதா ஆகியோர் வாழ்த்தினர்.

