ADDED : டிச 05, 2025 08:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: 'மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுவதால், மும்பை எக்ஸ்பிரஸ் நாளை (டிச. 6) திருப்பூர் ஸ்டேஷனுக்கு வராது,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மத்திய ரயில்வே கோட்டத்தில் பொறியியல் பணியால், திருவனந்தபுரம் - மும்பை (எண்:16322) எக்ஸ்பிரஸ் நாளை (டிச. 6ம் தேதி) திருச்சூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வழித்தடம் மாற்றப்படுகிறது. வழக்கமான பாதையான ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனுார், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியில் பயணிக்காது; மாறாக, மங்களூரூ, மடகான் வழியாக மும்பை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

