/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க கல்வித்துறை ஆயத்தம்
/
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க கல்வித்துறை ஆயத்தம்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க கல்வித்துறை ஆயத்தம்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க கல்வித்துறை ஆயத்தம்
ADDED : மார் 01, 2024 12:26 AM
உடுமலை;அரசுப்பள்ளிகளின் சிறப்புத்திட்டங்களை வெளிப்படுத்தி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
உடுமலை கோட்டத்துக்குட்பட்ட உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதி அரசுப்பள்ளிகளில், இன்று முதல் புதிய கல்வியாண்டு, 2024 - 2025க்கான மாணவர் சேர்க்கை துவங்குகிறது.
அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வி, உயர்தர கட்டமைப்பு, சிறப்பு ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பொருட்கள்,
இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், கல்விச்சுற்றுலா, கலைத்திருவிழா, தனித்திறன்களையும், அறிவியல் சிந்தனைகளையும் மேம்படுத்துவதற்கான மன்றங்கள், தன்னம்பிக்கையை மேம்படுத்தும் தற்காப்பு கலைபயிற்சி, கல்வி சாரா இணை செயல்பாடுகள்,
விளையாட்டுப்போட்டிகள், தொழிற்கல்வி பயிற்சி, மாணவர்களுக்கான ஊக்கத்தொகை உட்பட சிறப்பு அம்சங்களை பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சேர்க்கையில் சிறப்பு கவனம் செலுத்த, வட்டார கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு விழிப்புணர்வு ஊர்வலம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பது, சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் படிப்பதால், உயர்கல்வியில் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்தும் பெற்றோருக்கு அறிவுறுத்த, ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் சேர்க்கையை அதிகரிப்பதற்கான, விழிப்புணர்வு நடவடிக்கைகளும் இன்று முதல் துவங்குகிறது.

