ADDED : பிப் 05, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக, பள்ளி கல்வித்துறை 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களை நியமித்தது. இவர்கள், பள்ளிகள், தங்கள் வீடுகள் அல்லது தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மாலை நேர வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
தற்போது, பள்ளி கல்வி இயக்குனர் தரப்பில் இருந்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ''தன்னார்வலர்களை பகல் நேரத்தில் பள்ளிக்கு வர வழைத்து, வகுப்பறை பாடங்களை நடத்தச் சொல்வதோ, பள்ளி வேலைகளை செய்யச் சொல்வதோ கூடாது. தன்னார்வலர்கள் வகுப்பறையில் இருந்தால், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

