/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருவாசகம் முற்றோதல்; சிவனடியார்கள் பரவசம்
/
திருவாசகம் முற்றோதல்; சிவனடியார்கள் பரவசம்
ADDED : மே 20, 2025 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாணிக்கவாசகர் மன்றம் சார்பில், திருவாசகம் முற்றோதல் நேற்று, விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடந்தது.
திருப்பூர் மாணிக்கவாசகர் மன்றம் மற்றும் அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம் சார்பில், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மாதத்தின் 3 வது திங்கட்கிழமை திருவாசகம் முற்றோதல் நடத்தப்படுகிறது.
அதன்படி, நேற்று சிறப்பு வழிபாட்டுடன், திருவாசக முற்றோதல், காலை, 8:00 மணிக்கு துவங்கியது. சிவனடியார்கள் கூட்டாக சேர்ந்து, கை தாளம் இசை மற்றும் பண்ணிசையுடன் பதிகங்களை பாராயணம் செய்தனர். நிறைவாக, மகாதீபாராதனை நடந்தது.