/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சூழலும் சிறக்கும்... செலவும் மிச்சமாகும்! சி.என்.ஜி., பஸ்கள் இயக்கலாமே!
/
சூழலும் சிறக்கும்... செலவும் மிச்சமாகும்! சி.என்.ஜி., பஸ்கள் இயக்கலாமே!
சூழலும் சிறக்கும்... செலவும் மிச்சமாகும்! சி.என்.ஜி., பஸ்கள் இயக்கலாமே!
சூழலும் சிறக்கும்... செலவும் மிச்சமாகும்! சி.என்.ஜி., பஸ்கள் இயக்கலாமே!
ADDED : நவ 10, 2024 04:11 AM

உலகம் முழுதும் காலநிலை மாற்றம் என்பது தீவிர பிரச்னையாக இருக்கிறது. இதற்கு பூமியின் வெப்ப நிலை உயர்வே முதன்மையான காரணம். தொழிற்சாலைகள், வாகன புகை, நச்சு வாயுவை வெளியேற்றும் மின்சாதன பொருட்களின் பயன்பாடு ஆகியவை பூமியின் வெப்பத்தை அனுதினமும் உயர்த்துகிறது.
முயற்சி எடுத்தாலும் நம்மால் தடுக்க முடியாது என்பது விவாதமாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் மாசு ஏற்படாமல் நம்மால் தடுக்க முடியும்.
அதற்காக, மின்சார பயன்பாட்டு வாகனங்கள் இயக்கம் மெல்ல சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பஸ்களிலும் இயற்கை எரிவளி (சி.என்.ஜி.,) டீசலுக்கு மாற்றாக பொருத்தப்படுகிறது.
கோவையில் கடந்த ஆகஸ்ட் மாதம், இரண்டு பஸ்களில் சி.என்.ஜி., பொருத்தப்பட்டது. கோவையில், உக்கடம் - மயிலம்பட்டி, ரயில்வே ஸ்டேஷன் - கிணத்துக்கடவு ஆகிய இரண்டு வழித்தட பஸ்களில் சி.என்.ஜி., (அழுக்கப்பட்ட இயற்கை எரிவளி) மாற்றப்பட்டுள்ளது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
டீசல் மூலம் லிட்டருக்கு, 5.25 கி.மீ., பஸ் இயக்கினால், 17.40 ரூபாய் செலவாகிறது. சி.என்.ஜி., மூலம் லிட்டருக்கு, 5.60 கி.மீ., இயக்க முடிகிறது. அதே நேரம் செலவு, 14.64 ஆக மட்டுமே உள்ளது. அதாவது, டீசலில் இயக்காமல் சி.என்.ஜி.,யில் இயக்கினால், ஒரு கி.மீ.,க்கான செலவு, 2.76 வரை குறைகிறது. அவ்வகையில் கடந்த ஆக., மாதம், 1 முதல், 31 ம் தேதி வரை, 16 ஆயிரத்து, 925 கி.மீ., சி.என்.ஜி., மூலம் பஸ் இயக்கப்பட்டதில், 46 ஆயிரத்து, 690 ரூபாய் அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்துக்கு, சேமிப்பாகியுள்ளது. இதனால், சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பெருநகரங்களில் மெல்ல அரசு பஸ்கள் சி.என்.ஜி.,யாக மாற்றப்பட்டு வருகிறது.
சமீபத்தில், மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின்கட்கரி, ''பொது போக்குவரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் டீசலில் இயங்கும் பஸ்களே இருக்காது; அனைத்தும் மின்சார பஸ்சாக இருக்கும். சி.என்.ஜி., பஸ்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்,'' என தெரிவித்திருந்தார்.
இதற்கு முக்கிய காரணம், டீசல் பஸ்சுக்கு இணையாக ஓடும் இந்த பஸ்கள், 17 சதவீதம் கூடுதல் மைலேஜ் பெற்றுத் தருவது தான். சி.என்.ஜி., பஸ்கள் எரிபொருள் செலவை பகுதியாக குறைத்து, சேமிப்பை உருவாக்கிறது. தற்போது, அரசு போக்குவரத்து கழகம் டீசல் செலவில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவது அனைவரும் அறிந்ததே.
கோவையை தொடர்ந்து திருப்பூர் போன்ற நகரங்களில் சி.என்.ஜி., பஸ்கள் இயக்கத்துக்கு வர வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருப்பூர் சாலைகளில் தற்போது இயங்கும் டீசல் பஸ்கள், ஒரு லிட்டர் டீசலுக்கு, 5 - 10 கி.மீ., என்ற அளவிலேயே தடுமாறி வருகிறது. பரிசோதனை முறையில் ஐந்து முதல் பத்து வழித்தடத்தில் சி.என்.ஜி., பஸ் இயக்கத்துக்கு கொண்டு வரப்பட்டால், சேமிப்பு உயர்வது நிச்சயம்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருப்பூர் சாலைகளில் தற்போது இயங்கும் டீசல் பஸ்கள், ஒரு லிட்டர் டீசலுக்கு, 5 - 10 கி.மீ., என்ற அளவிலேயே தடுமாறி வருகிறது