/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லஞ்சம் கேட்டதால் பதிலடி பிச்சை எடுத்த விவசாயி
/
லஞ்சம் கேட்டதால் பதிலடி பிச்சை எடுத்த விவசாயி
ADDED : மார் 06, 2024 01:09 AM

உடுமலை,:திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா அலுவலகத்தில், சின்னவீரம்பட்டியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, விவசாயி. இவர், தன் நிலத்திற்கான பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ளார்.
இரு மாதங்களாக அதிகாரிகள் அலைக்கழித்ததோடு, லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர மறுத்த நிலையில், நேற்று காலை விண்ணப்பத்தின் நிலை அறிய, தாலுகா அலுவலகம் வந்தார்.
அதிகாரிகளிடம் கேட்ட போது, லஞ்சம் தந்தால் மட்டுமே மாறுதல் செய்ய முடியும் என கூறி, அவரது மனுவையும் துாக்கி எறிந்தனர்.
வேதனையடைந்த விவசாயி, தாலுகா அலுவலக வளாகத்தில், 'அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டும்; பிச்சை போடுங்கள்' என கூறி, துண்டை விரித்து, மனுவையும் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார் பேச்சு நடத்தி, விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்ததையடுத்து, விவசாயி போராட்டத்தை விலக்கினார்.

