/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 'விவசாயிகளின் குரல் எழுத்தாக வேண்டும்'
/
திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 'விவசாயிகளின் குரல் எழுத்தாக வேண்டும்'
திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 'விவசாயிகளின் குரல் எழுத்தாக வேண்டும்'
திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 'விவசாயிகளின் குரல் எழுத்தாக வேண்டும்'
UPDATED : அக் 05, 2025 06:16 AM
ADDED : அக் 04, 2025 11:18 PM

திருப்பூர்: திருப்பூர் குமரனின், 122வது பிறந்த நாள் விழாவை, பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் நேற்று கொண்டாடினர்.
சுதந்திர போராட்ட வீரர், கொடி காத்த திருப்பூர் குமரனின் 122வது பிறந்த நாள் விழா, நேற்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
திருப்பூரில், அவரது நினைவகத்தில் உள்ள சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை தாங்கினார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் அமித் ஆகியோர், திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''வெள்ளையர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய போது, திருப்பூர் குமரன் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடந்தது. இருப்பினும், கொடியை தரையில் சாயவிடாமல் உயிர்நீத்தார்; கொடிகாத்த குமரன் என்ற புகழை பெற்றார். மத்திய அரசு, 2007 ல் திருப்பூர் குமரனுக்கு, ஸ்டாம்ப் வெளியிட்டு சிறப்பித்தது.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில், 11 ஆயிரத்து, 195 சதுரடி பரப்பில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. எதிர்காலத்தில், திருப்பூர் மக்களுக்கு, குமரனின் சுதந்திர போராட்டம் மற்றும் உயிர்தியாகத்தை வெளிப்படுத்தும் வகையில், குமரன் நினைவகம் அமைந்துள்ளது'' என்றார்.
திருப்பூர் மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில், திருப்பூர் குமரனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. திருப்பூர் டி.எஸ்.எஸ்.டி. அறக்கட்டளை தலைமை நிறுவனர் சக்திவேல், நிர்வாகி விவேகானந்தன், துணை தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நினைவகம் முன்பாக உள்ள நினைவுத்துாணுக்கும் மலர்துாவி மரியாதை செய்தனர்.
திருப்பூர் குமரனின் வாரிசுதாரர்கள், பொதுநல அமைப்புகள், திருப்பூர் குமரன் பெயரில் இயங்கும் அமைப்பினர் மாலை அணிவித்து கொண்டாடினர். செங்குந்த முதலியார் ஜன சங்கம் சார்பில், நிர்வாகிகளும், உறுப்பினர்களும், மஞ்சள் துண்டு அணிந்து வந்து, குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து, பள்ளி, கல்லுாரிகள் சார்பிலும், பொதுநல அமைப்பினரும், திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.