/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பராமரிப்பில்லாத ஓடை பாலம் அச்சத்துடன் கடக்கும் அவலம்
/
பராமரிப்பில்லாத ஓடை பாலம் அச்சத்துடன் கடக்கும் அவலம்
பராமரிப்பில்லாத ஓடை பாலம் அச்சத்துடன் கடக்கும் அவலம்
பராமரிப்பில்லாத ஓடை பாலம் அச்சத்துடன் கடக்கும் அவலம்
ADDED : ஜன 16, 2025 06:28 AM
உடுமலை : உடுமலை நகரில், தங்கம்மாள் ஓடை மீது கட்டப்பட்ட பாலங்கள் பராமரிப்பின்றி, இடிந்து வருகிறது; பாலங்களை புதுப்பிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை நகரின் மேற்கு எல்லையில், இயற்கை நீராதாரமான தங்கம்மாள் ஓடை அமைந்துள்ளது. நகர வளர்ச்சிக்கு பிறகு, இந்த ஓடை கழிவு நீர் கால்வாயாக மாற்றப்பட்டு விட்டது.
ஓடையின் இருபுறங்களிலும், 10க்கும் மேற்பட்ட லே-அவுட்கள் அமைந்துள்ளன. அங்கு வசிக்கும் மக்கள், ஓடையின் மீது கட்டப்பட்டுள்ள சிறுபாலங்கள் வழியாகவே குடியிருப்புக்கு செல்ல முடியும்.
நீண்ட இழுபறிக்கு பிறகு, தங்கம்மாள் ஓடையை துார்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, கான்கிரீட் கரை அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கி, பணிகள் இழுபறியாக நடந்து வருகிறது. ஆனால், ஓடையை கடக்க அமைக்கப்பட்ட பாலங்களை புதுப்பிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறிப்பாக, அதிக போக்குவரத்து உள்ள, ராகல்பாவி இணைப்பு ரோட்டுக்கு செல்வதற்கான பாலம், இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் ஒரு பகுதியில் தடுப்பு சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்து விட்டது. இதனால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பாலத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அவ்வழியாக, வேளாண் விளைபொருட்கள் மற்றும் இடுபொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இதே போல், தலகொண்டம்மன் அருகிலுள்ள பாலத்திலும், தடுப்பு சுவர் சேதமடைந்து காணப்படுகிறது.
எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் தங்கம்மாள் ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட பாலங்களின் நிலையை ஆய்வு செய்து, அவற்றை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

