/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாயமான பயனாளிகள் இலவச பட்டா ரத்தாகிறது
/
மாயமான பயனாளிகள் இலவச பட்டா ரத்தாகிறது
ADDED : டிச 13, 2024 12:10 AM
திருப்பூர்; கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: தாராபுரம் வட்டம், தளவாய்ப்பட்டினம் கிராமத்தில், ஆதி திராவிடர் நலத்துறை வாயிலாக, நிலமெடுப்பு செய்யப்பட்டு, அதில், 203 நபர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.
'தமிழ்நிலம்' மென்பொருளில் பட்டா பெற்ற பயனாளிகளை இணைய வழி பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இலவச வீட்டுமனைப்பட்டா பெற்ற பயனாளிகளை இனம் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டால், வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட இருக்கிறது. மேற்கண்ட மனையிடத்தில் கள விசாரணை செய்ததில் பட்டா பெற்ற பயனாளிகளில், 63 பேர் இனம் காண முடியாத நிலையில் உள்ளனர்.
அதே போன்று, திருப்பூர் தெற்கு வட்டம், வீரபாண்டி கிராமத்தில், 128 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. இதில், 12 பயனாளிகள் இனம் கண்டறிய முடியாத நிலையில் உள்ளனர்.
பட்டாவில் உள்ள நிபந்தனைப்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் வீடு அமைத்து குடியேறாமல் நிபந்தனையை மீறியுள்ளதால், 'அந்த பட்டாவை ஏன் ரத்து செய்யக் கூடாது?' என்பதற்குரிய விளக்கத்தை, கடிதம் வாயிலாகவோ, நேரிலோ மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில், விளக்கம் எதுவும் பெறப்படவில்லை எனக்கருதி, அவருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

