/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொடர் சாதனை நிகழ்த்திய தி பிரன்ட்லைன் பள்ளி
/
தொடர் சாதனை நிகழ்த்திய தி பிரன்ட்லைன் பள்ளி
ADDED : மே 18, 2025 01:00 AM

திருப்பூர் : திருப்பூர் தி பிரன்ட்லைன் அகாடமி பள்ளி மாணவர்கள், பிளஸ்2 பொதுத்தேர்வில் தொடர்ந்து மூன்று ஆண்டு களாக 595 மதிப்பெண்களுடன், மாநில அளவில் சாதனை படைத்து வருகின்றனர். நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில், 596 மதிப்பெண்கள் பெற்று, தமது சாதனையை தாமே முறியடித்துள்ளனர்.
மாணவி திவ்யஸ்ரீ, 596 மதிப்பெண்களுடன் முதலிடம்; 591 மதிப்பெண்களுடன் மோனிஷா இரண்டாமிடம் பிடித்துள்ளனர். பிளஸ்1 பொதுத்தேர்வில், தர்ஷினி, ஸ்ரீமதி இருவரும் 590 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர்.
கடந்த 18 ஆண்டுகளாக இப்பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுவருகிறது. மாணவி அஜிதா, 494 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
பிளஸ்1 பொதுத்தேர்வில், 58 மாணவர்கள், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்; பிளஸ்2 தேர்வில், 32 மாணவர்கள்; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 8 மாணவர்கள் நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பில், 14 மாணவர்கள் 99 மதிப்பெண்கள்; 11 மாணவர்கள், 98 மதிப்பெண் பெற்றுள்ளனர். இப்பள்ளியில் தற்பொது, பிளஸ்1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வேதியியல், இயற்பியல், கணிதம், உயிரியல், கணினி அறிவியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.
பேசிக் மெக்கானிக் இன்ஜினியரிங், வேலைவாய்ப்புத்திறன், வணிக கணிதவியல், புள்ளியியல், கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், தணிக்கை பாடப்பிரிவுகளும் உள்ளன என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.