தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முழு நேரமும் ‘டிஜிட்டல் சர்வே’முடங்கும் அடிப்படை பணிகள்! 

முழு நேரமும் ‘டிஜிட்டல் சர்வே’முடங்கும் அடிப்படை பணிகள்! 

முழு நேரமும் ‘டிஜிட்டல் சர்வே’முடங்கும் அடிப்படை பணிகள்! 


ADDED : செப் 29, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: ‘காரிப்’ பருவத்திற்கான டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட தன்னார்வலர்கள் முன்வராததால், வேளாண், தோட்டக்கலை கள அலுவலர்களே களத்தில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது; ‘இதனால், துறையின் அன்றாட அடிப்படை பணிகள் ஸ்தம்பிக்கின்றன’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், ‘காரிப்’ பருவ பயிர் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. சாகுபடி பரப்பு மற்றும் பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் துல்லியமான புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே மத்திய அரசு, மாநில வேளாண் துறைக்கான நிதியை ஒதுக்குகிறது. எனவே, ‘இக்கணக்கெடுப்பை துல்லியமாக நடத்தி, இம்மாதம், 30ம் தேதிக்குள் முழுமையாக முடிக்க வேண்டும்’ என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. கணக்கெடுப்புப் பணிகள் முழுமையடைந்த பின்னரே, மத்திய அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால், கள அலுவலர்கள் நிலங்களுக்கு நேரடியாக சென்று ‘மேப்பிங்’ செய்தும், புகைப்படங்கள் எடுத்தும் டிஜிட்டல் சர்வே பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.வேளாண், தோட்டக்கலை கள அலுவலர்கள் கூறியதாவது;தினசரி, பயிர் சர்வே பணிகளை மேற்கொள்வதற்கே பணி நேரம் சரியாக இருக்கிறது. காரிப் பருவம் முடிந்தவுடன், ‘ரபி’ பருவத்திற்கான டிஜிட்டல் பயிர் ‘சர்வே’ பணிகள் தொடங்கவுள்ளன. சர்வே பணியில் உள்ளூர் கிராமத்து இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஈடுபடுத்த அரசு அனுமதி அளித்துள்ளதால், அவர்களுக்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வருகிறோம்.

முழு நேரமும்...

––––––––––––––––––

பயிர் செய்யப்பட்ட நிலங்களில் ஒரு சர்வேக்கு, 5 ரூபாய், தரிசு நிலங்களில் ஒரு சர்வேக்கு, 3 ரூபாய் மட்டுமே அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. ஒருவரால் ஒரு நாளைக்கு அதிகபட்சம், 60 முதல் 70 ‘சர்வே’க்கள் எடுக்க முடியும். பெட்ரோல் மற்றும் உணவுச் செலவுகளை அவர்களே ஏற்க வேண்டியிருப்பதால், சொற்ப வருமானத்திற்காக ‘சர்வே’ பணி செய்ய யாரும் முன்வருவதில்லை.‘காரிப்’ மற்றும் ‘ரபி’ பருவ டிஜிட்டல் பயிர் சர்வே மற்றும் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் வழங்கும் பணிகள் போன்ற நிர்வாக பணிகளிலேயே, கள அலுவலர்களின் முழு நேரமும் செலவாகிறது. இதன் விளைவாக, விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை கற்றுத் தருவது, சாகுபடி மற்றும் உற்பத்திப் பெருக்கத்திற்கான ஆலோசனைகளை வழங்குவது போன்ற வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையின் முதன்மையான களப்பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, அரசு, தன்னார்வலர்களுக்கான  தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us