sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எதிர்பார்ப்பு பொய்த்தாலும் எதிர்காலம் பொய்க்காது! தொழில்துறையினரின் அடுத்த கட்ட நம்பிக்கை

/

எதிர்பார்ப்பு பொய்த்தாலும் எதிர்காலம் பொய்க்காது! தொழில்துறையினரின் அடுத்த கட்ட நம்பிக்கை

எதிர்பார்ப்பு பொய்த்தாலும் எதிர்காலம் பொய்க்காது! தொழில்துறையினரின் அடுத்த கட்ட நம்பிக்கை

எதிர்பார்ப்பு பொய்த்தாலும் எதிர்காலம் பொய்க்காது! தொழில்துறையினரின் அடுத்த கட்ட நம்பிக்கை


ADDED : பிப் 25, 2024 11:32 PM

Google News

ADDED : பிப் 25, 2024 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:தாக்கலாகியுள்ள, பட்ஜெட்களில், திருப்பூருக்கென சிறப்பு அறிவிப்பு இல்லையென, குறு, சிறு தொழில்துறையினர் அதிருப்தியில் உள்ளனர்; மானிய கோரிக்கையின்போது, பின்னலாடை தொழில்துறையினருக்கான சலுகைகளை முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்பார்ப்புகள் பொய்த்தாலும், எதிர்காலம் பொய்க்காமல் இருப்பது அரசின் கையில்தான் உள்ளது என்கின்றனர் தொழில்துறையினர்.

மே மாதம் தாக்கலாகும் முழுமையான மத்திய பட்ஜெட், தங்கள் எதிர்பார்ப்புகளை ஓரளவாவது பூர்த்தி செய்யுமென்று பின்னலாடைத்துறையினர் கருதுகின்றனர்.

திருப்பூர் பின்னலாடை தொழிலில், ஏற்றுமதி வர்த்தகமும், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியும், 'ஜாப்ஒர்க்' தொழில்களும், பல்வேறு சவால்களை சந்தித்துள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, 'நெருப்பாற்றில் நீந்திவந்த' ஏற்றுமதியாளர்களுக்கு, தற்போதுதான் சிறிய முன்னேற்றம் கிடைத்துள்ளது. உள்நாடு, உள்ளூர் பிரச்னைகள் மறைந்த நிலையில், சர்வதேச பிரச்னைகள் தொழிலை பதம்பார்த்துவிட்டது.

திருப்பூர், பிப். 26-

தாக்கலாகியுள்ள, பட்ஜெட்களில், திருப்பூருக்கென சிறப்பு அறிவிப்பு இல்லையென, குறு, சிறு தொழில்துறையினர் அதிருப்தியில் உள்ளனர்; மானிய கோரிக்கையின்போது, பின்னலாடை தொழில்துறையினருக்கான சலுகைகளை முதல்வர் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மே மாதம் தாக்கலாகும் முழுமையான மத்திய பட்ஜெட், தங்கள் எதிர்பார்ப்புகளை ஓரளவாவது பூர்த்தி செய்யுமென்று பின்னலாடைத்துறையினர் கருதுகின்றனர்.

திருப்பூர் பின்னலாடை தொழிலில், ஏற்றுமதி வர்த்தகமும், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியும், 'ஜாப்ஒர்க்' தொழில்களும், பல்வேறு சவால்களை சந்தித்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, 'நெருப்பாற்றில் நீந்திவந்த' ஏற்றுமதியாளர்களுக்கு, தற்போதுதான் சிறிய முன்னேற்றம் கிடைத்துள்ளது. உள்நாடு, உள்ளூர் பிரச்னைகள் மறைந்த நிலையில், சர்வதேச பிரச்னைகள் தொழிலை பதம்பார்த்துவிட்டது.

நகர முடியாத நெருக்கடி

நீண்ட நாட்களாக, பஞ்சு - நுால் விலை நிலையாக இருந்ததால், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டனர். இருப்பினும், அபரிமிதமாக உயர்த்தப்பட்ட மின் கட்டணங்கள், அவர்களை நகர முடியாதபடி, கட்டிப்போட்டுள்ளது.

பலகட்ட போராட்டங்கள் நடத்தியதால், தமிழக அரசின், 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குறைந்தபட்ச அறிவிப்பாவது இருக்கும் என்ற நம்பினர். மின் கட்டணம் தொடர்பாகவோ, திருப்பூர் பின்னலாடை தொழில் சம்பந்தமாகவோ அறிவிப்புகள் இல்லாதது, கடும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இருப்பினும், முதல்வர் மனது வைத்தால், மானிய கோரிக்கையின் போதாவது, சலுகை அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக காத்திருக்கின்றனர்.

அறிவிப்புகள் இல்லை

சர்வதேச போட்டிகளை சமாளிக்க, பின்னலாடைத் தொழில் வளர்ச்சிக்கான சில கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தனர். இருப்பினும், மத்திய பட்ஜெட், இடைக்கால பட்ஜெட் என்பதால், எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை.

'டியூட்டி டிராபேக்' முன்பே உயர்த்தப்பட்டது. 'பேக்கிங் கிரெடிட்' மீதான வட்டி மானிய உயர்வு; மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் மானிய திட்டம்; புதிய தொழிற்பூங்கா அறிவிப்பு; பசுமை சார் உற்பத்தியை அங்கீகரிக்கும் ஆக்கப்பூர்வமான அறிவிப்பு; சாய ஆலைகளின் நெருக்கடியை போக்கும் வகையில், சோலார் திட்டங்கள் ஆகியன அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இவை இடம்பெறவில்லை.

நிறைவேற வாய்ப்பு

திருத்தப்பட்ட 'ஏ-டப்' திட்டத்தை நீட்டிப்பது போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளது மகிழ்ச்சி; இருப்பினும், முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. கொரோனா கால அவசரகால கடன் போலவே, புதிய அவசரகால கடன் திட்டம்; செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை ஊக்குவிக்கும் புதிய சலுகைகள் எதிர்பார்க்கப்பட்டது.

மே மாதம் தாக்கலாகும் மத்திய அரசு பட்ஜெட்டில் பின்னலாடை தொழில்துறையினருக்கு தேவையான அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. வரும் லோக்சபா தேர்தலில், தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு, புதிய அரசு அதை நிறைவேற்றவும் வாய்ப்புள்ளது.

அதற்காகவே, அனைத்து அரசியல் கட்சிகளும், தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கை தொடர்பான அறிக்கைகளை பெற்று, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் வழங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us