ADDED : ஆக 20, 2025 10:39 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆட்சி மொழி பயிலரங்கம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ வரவேற்றார்.
தேனி தமிழ்ச்சங்க நிறுவனர் இளங்குமரன் பேசியதாவது: மொழி என்பது வெறும் கருத்துகளை மட்டும் பரிமாறும் ஊடகம் அல்ல. பேசும் மனிதர்களின் உயிர்ப்பு, மொழி. தன்னை யார் என்று இந்த உலகத்துக்கு உணர்த்துவது மொழிதான். உலகின் மூத்த மொழி என்கிற பெருமைக்குரியது, நம் தமிழ் மொழி. உலகெங்கும் ஏழாயிரத்துக்கும் அதிகமான மொழிகள் உள்ளன. இவற்றில், தமிழ் உள்பட ஆறு மொழிகள் மட்டுமே தொன்மையானவை. அதிலும், இலக்கியம், இலக்கணத்துடன் இருப்பது தமிழ் மொழி மட்டும்தான். உலகின் மற்ற மொழிகளுக்கெல்லாம், பல சொற்களை கடன் கொடுத்த மூத்த மொழி, தமிழ். அரசு ஊழியர்கள், தங்கள் கோப்புக்களை பிழையின்றி, தமிழில் தயாரிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

