sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வெற்றி இலக்கு... கட்சிகள் கணக்கு!

/

வெற்றி இலக்கு... கட்சிகள் கணக்கு!

வெற்றி இலக்கு... கட்சிகள் கணக்கு!

வெற்றி இலக்கு... கட்சிகள் கணக்கு!

ADDED : நவ 25, 2024 06:15 AM

Google News

ADDED : நவ 25, 2024 06:15 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆளும்கட்சி என்பது சாதகம்; அதுவே பாதகமும் கூட. கடந்த சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, மொத்தம் மூன்று தொகுதிகளைத் தான் தி.மு.க., வெல்ல முடிந்தது. திருப்பூர் தெற்கு மற்றும் தாராபுரம் தொகுதிகளில் கடும் இழுபறிக்கிடையேதான் வெற்றி சாத்தியமானது.

ஆயிரம் ரூபாய் உதவி தொகை; மாணவர் உதவி தொகை, மகளிர் இலவச பஸ் பயணம் போன்ற திட்டங்களை முன்னிறுத்தி ஓட்டுகளைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் மேம்படுத்தினால் தான் வார்டு பகுதிகளில் ஓட்டுகளைப் பெற முடியும். ஏனெனில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அதன் பிரதிநிதிகள் வாயிலாக இதுகுறித்த கருத்துகளைக் கேட்டு, திட்டங்களை துவங்க எண்ணியுள்ளனர்.

துவங்கப்பட்ட பணிகளே பெரும்பாலும் இழுபறியில் கிடப்பது; அடுத்து துவங்கப்படும் திட்டங்களுக்கு நிதி ஆதாரம் இல்லாதது; மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்து வரி உள்ளிட்ட வரி உயர்வு போன்ற பல பிரச்னைகள் எதிரியாக உள்ளன. இதற்கு மத்திய அரசைக் காரணம் காட்டுவதற்கான யுத்திகள் வகுக்கப்படுகின்றன. நிதியாதாரங்கள் இன்றி கிடப்பில் போட்டுள்ள திட்டங்களை விரைந்து செய்து முடிக்கும் வகையில் முயற்சிகளை மேற்ெகாண்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட தொகுதிகளை கைப்பற்ற பல்வேறு 'அசைன்மென்ட்'களை திட்டமிட்டு உரிய நிர்வாகிகளை களம் இறக்கும் செயல்பாடுகளை மேலிடம் மேற்கொள்ள உள்ளது. கட்சியில் முன்னர் இருந்தது போல், இரு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்வது; மாவட்ட செயலாளர்களை தேர்தலில் களம் இறக்குவது; இளைஞர்கள், புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்குவது உள்ளிட்டவையும் இவற்றில் அடங்கும். கட்சியில் பதவியைப் பெறவும், தேர்தலில் 'சீட்' வாங்கவும் நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கட்சி தலைமையைக் குஷிப்படுத்தவும் தங்கள் பலத்தை நிரூபிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், 2009ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் தோற்றுவிக்கப்பட்டது. முதன்முதலாக, 2011ல் சட்டசபை தேர்தல் நடந்தது. அனைத்து சட்டசபை தொகுதிகளையும் அ.தி.மு.க., கூட்டணி வென்றது. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த மா.கம்யூ., திருப்பூர் தெற்கு தொகுதியை கைப்பற்றியது.

கடந்த 2016 தேர்தலில், தாராபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் காளிமுத்துவும், மடத்துக்குளத்தில் ஜெயராமகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர். மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க., வென்றது; அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தனியரசு, காங்கயத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த, 2021 தேர்தலில், திருப்பூர் தெற்கு, காங்கயம், தாராபுரம் தொகுதிகளை தி.மு.க., வென்றது. கடந்த சில தேர்தல்களில், அ.தி.மு.க.,விடம் இருந்து ஒவ்வொரு தொகுதியும் கை நழுவிவிட்டது; மாநகராட்சியும் கைநழுவியது.

இந்நிலையை மாற்ற புதிய வியூகத்துடன், சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகிவருகின்றனர். குறிப்பாக, மின்சார கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட மக்கள் பாதிப்புகளை எடுத்துக்கூறி, மீண்டும் எட்டு தொகுதிகளையும் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

''அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அப்படியிருந்தும், கூட்டணி பலத்தால், தி.மு.க., வென்றது; அதன்படி, உரிமைத்தொகை வழங்குவதால் மட்டும் தி.மு.க., வெற்றி பெற முடியாது. இம்முறை கூட்டணியை மாற்றி அமைப்போம். 2011 சொத்துவரி... 2024 சொத்துவரி விவரத்தை கூறி, வீடு வீடாக ஓட்டுக்கேட்போம்.

அ.தி.மு.க., ஆட்சியில், ஒவ்வொரு வீட்டுக்கு கிடைத்த நலத்திட்டம்; தற்போது கிடைக்கும் திட்டம் ஒப்பிட்டு பார்த்தும் ஓட்டுக்கேட்போம்... திருப்பூர் தொகுதிகள் அ.தி.மு.க., வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்து காட்டுவோம்'' என்று கூறுகின்றனர் அ.தி.மு.க., நிர்வாகிகள்.

திருப்பூர் மாவட்டத்தில் ஒன்றிரண்டு தொகுதிகளையாவது இம்முறை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ., உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அன்றாடம் தங்கள் நிர்வாகிகள் மூலம் சந்தித்து தெரிவிப்பதை சிரமேற்கொண்டுள்ளது.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்து தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டது. வேட்பாளராக தற்போதைய மத்திய அமைச்சர் முருகன் களம் கண்டார். ஓட்டு எண்ணிக்கையில் கடைசி வரை முன்னிலையில் இருந்த பா.ஜ., கடைசி சில ரவுண்டில் கோட்டை விட்டு, தி.மு.க.,விடம் வெற்றியைப் பறிகொடுத்தது. கடந்த, நான்கு ஆண்டுகளுக்குள் பா.ஜ., தலைவர் அண்ணாமலை வருகை மற்றும் அவரது யாத்திரை, லோக்சபா தேர்தல் சந்திப்பு என, பல வகையில் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம், மக்கள் செல்வாக்கு வெகுவாக அதிகரித்துள்ளது என்கின்றனர் பா.ஜ., நிர்வாகிகள்.

இதன் காரணமாக, அவிநாசி, வடக்கு, பல்லடம், தாராபுரம் தொகுதிகளில் பா.ஜ., வின் செல்வாக்கு, தற்போதைய நிலைமை குறித்து கட்சியினர் கள ஆய்வு செய்து வருகின்றனர். அண்ணாமலை தமிழகம் திரும்பிய பின், சட்டசபை தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கும் என கட்சியினர் எதிர்பார்த்துள்ளனர். வரும் தேர்தலில் கூட்டணி போன்றவற்றை பொறுத்து, திருப்பூர் மாவட்டத்தில், ஒன்றிரண்டு தொகுதிகளில் பா.ஜ., களமிறங்க திட்டமிட்டு வருகின்றனர்.

காங்கிரசில் கோஷ்டிப்பிரச்னை பிரதானமாக உள்ளது. கட்சி கூட்டங்கள், போராட்டங்களின் போது இது தலையைக் காட்டும். திருப்பூர் மாவட்டத்தில் தேர்தலில் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவாக கொடி பிடித்து, ஓட்டு கேட்டு பிரசாரம் செய்து விட்டு ஒதுங்கிக்கொள்ளும் நிலை உள்ளது. இந்த முறை திருப்பூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவு தொகுதிகளைப் பெற்று கரை சேரும் எண்ணத்தில் காங்., உள்ளது. ஆனால், கூட்டணிக்கணக்கில் இது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறி.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஏறத்தாழ 1.5 லட்சம் ஓட்டுக்களை இக்கட்சி பெற்றது. தற்போது பல்வேறு காரணங்களால் கட்சி நிர்வாகத்தில் சில மாவட்டங்களில் குழப்பம் நிலவுகிறது. இருப்பினும் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை சலசலப்புகள் இல்லை. ஓட்டு சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்ற திட்டத்துடன் கட்சியினர் உள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓட்டுகள் இக்கட்சிக்கு பெருமளவு கிடைத்ததாக கூறப்படுகிறது. விஜய் துவங்கிய கட்சியால் இவர்களுக்கான ஓட்டு சதவீதம் குறையலாம் என்று கூறப்பட்டாலும், இது நடக்காது என்கின்றனர் உள்ளூர் கட்சியினர். அரசியல் கள நிலவரங்களில் ஏற்படும் மாற்றங்கள் இக்கட்சிக்கான ஓட்டுக்களாக மாறும் என்பது மறுக்க முடியாது.

தமிழக வெற்றிக்கழகம் முதன்முறையாக சட்டசபை தேர்தலை, 2026ல் சந்திக்கப்போகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் மன்றம் சார்பில் போட்டியிட்டு தங்கள் பலத்தை சுயபரிசோதனை செய்தனர். விக்கிரவாண்டி மாநாடு திரும்பி பார்க்க வைத்துள்ளதால், சட்டசபை தேர்தலில் முழு பலத்தையும் பிரயோகிக்க தயாராகிவருகின்றனர். குறிப்பாக, மாவட்ட மற்றும் வார்டு கிளை நிர்வாகிகள் நியமித்த பிறகு, 'பூத்' கமிட்டி வலுவாக அமைக்கப்படும். இளம்பெண்கள், இளைஞர்களை கொண்டு பூத் கமிட்டி அமைத்து, தீவிர திண்ணை பிரசாரம் மூலம், மக்களை தங்கள் பக்கமாக திருப்புவோம் என்கின்றனர், த.வெ.க., நிர்வாகிகள்.

கூட்டணியைப் பொறுத்த வரை இரு கம்யூ., கட்சிகளும் தங்களுக்கான ஓட்டு வங்கி திருப்பூர் தொகுதிகளில் உள்ளது என்பதால், 'சீட்' கேட்பது வழக்கம். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதி, ஏதாவது ஒரு கம்யூ,, கட்சிக்கு வழங்க வாய்ப்புள்ளது. கூட்டணியின் பலம் காரணமாக இக்கட்சி கணிசமான ஓட்டுகளைப் பெற வாய்ப்புள்ளது.தற்போது மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டங்களை இக்கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. போராட்டம் மென்மையாகவும், பெயரளவுக்கும் இருக்கிறது என்று குற்றம் சொன்னால், 'ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தாலும், மக்கள் பிரச்னை என்றால் போராட தயங்க மாட்டோம்' என்று கம்யூ., கட்சியினர் உடனடியாக வாதம் செய்கின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் 2026ல்தான் என்றாலும், தற்போதிருந்தே பிரதானக் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன; போட்டி கடுமையானதாக இருக்கும் என்பதால், கூட்டணி உள்பட பல்வேறு மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டாலும், எந்தச் சூழலையும் எதிர்கொள்வதற்குத் தயாராகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் இதற்கேற்ப அரசியல் கட்சியினர் காய்களை நகர்த்தி வருகின்றனர் - வெற்றுக்கணக்காக இல்லாமல், வெற்றி இலக்காக மாறும் என்ற நம்பிக்கையுடன்...!

பலத்தை நிரூபிக்கதயாராகும் தி.மு.க.,

ஆளும்கட்சி என்பது சாதகம்; அதுவே பாதகமும் கூட. கடந்த சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, மொத்தம் மூன்று தொகுதிகளைத் தான் தி.மு.க., வெல்ல முடிந்தது. திருப்பூர் தெற்கு மற்றும் தாராபுரம் தொகுதிகளில் கடும் இழுபறிக்கிடையேதான் வெற்றி சாத்தியமானது.

ஆயிரம் ரூபாய் உதவி தொகை; மாணவர் உதவி தொகை, மகளிர் இலவச பஸ் பயணம் போன்ற திட்டங்களை முன்னிறுத்தி ஓட்டுகளைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் மேம்படுத்தினால் தான் வார்டு பகுதிகளில் ஓட்டுகளைப் பெற முடியும். ஏனெனில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அதன் பிரதிநிதிகள் வாயிலாக இதுகுறித்த கருத்துகளைக் கேட்டு, திட்டங்களை துவங்க எண்ணியுள்ளனர்.

துவங்கப்பட்ட பணிகளே பெரும்பாலும் இழுபறியில் கிடப்பது; அடுத்து துவங்கப்படும் திட்டங்களுக்கு நிதி ஆதாரம் இல்லாதது; மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்து வரி உள்ளிட்ட வரி உயர்வு போன்ற பல பிரச்னைகள் எதிரியாக உள்ளன. இதற்கு மத்திய அரசைக் காரணம் காட்டுவதற்கான யுத்திகள் வகுக்கப்படுகின்றன. நிதியாதாரங்கள் இன்றி கிடப்பில் போட்டுள்ள திட்டங்களை விரைந்து செய்து முடிக்கும் வகையில் முயற்சிகளை மேற்ெகாண்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட தொகுதிகளை கைப்பற்ற பல்வேறு 'அசைன்மென்ட்'களை திட்டமிட்டு உரிய நிர்வாகிகளை களம் இறக்கும் செயல்பாடுகளை மேலிடம் மேற்கொள்ள உள்ளது. கட்சியில் முன்னர் இருந்தது போல், இரு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்வது; மாவட்ட செயலாளர்களை தேர்தலில் களம் இறக்குவது; இளைஞர்கள், புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்குவது உள்ளிட்டவையும் இவற்றில் அடங்கும். கட்சியில் பதவியைப் பெறவும், தேர்தலில் 'சீட்' வாங்கவும் நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கட்சி தலைமையைக் குஷிப்படுத்தவும் தங்கள் பலத்தை நிரூபிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.

வியூகத்தை மாற்றுகிறதுஅ.தி.மு.க.,

திருப்பூர் மாவட்டம், 2009ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் தோற்றுவிக்கப்பட்டது. முதன்முதலாக, 2011ல் சட்டசபை தேர்தல் நடந்தது. அனைத்து சட்டசபை தொகுதிகளையும் அ.தி.மு.க., கூட்டணி வென்றது. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த மா.கம்யூ., திருப்பூர் தெற்கு தொகுதியை கைப்பற்றியது.

கடந்த 2016 தேர்தலில், தாராபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் காளிமுத்துவும், மடத்துக்குளத்தில் ஜெயராமகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர். மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க., வென்றது; அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தனியரசு, காங்கயத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த, 2021 தேர்தலில், திருப்பூர் தெற்கு, காங்கயம், தாராபுரம் தொகுதிகளை தி.மு.க., வென்றது. கடந்த சில தேர்தல்களில், அ.தி.மு.க.,விடம் இருந்து ஒவ்வொரு தொகுதியும் கை நழுவிவிட்டது; மாநகராட்சியும் கைநழுவியது.

இந்நிலையை மாற்ற புதிய வியூகத்துடன், சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகிவருகின்றனர். குறிப்பாக, மின்சார கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட மக்கள் பாதிப்புகளை எடுத்துக்கூறி, மீண்டும் எட்டு தொகுதிகளையும் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

''அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அப்படியிருந்தும், கூட்டணி பலத்தால், தி.மு.க., வென்றது; அதன்படி, உரிமைத்தொகை வழங்குவதால் மட்டும் தி.மு.க., வெற்றி பெற முடியாது. இம்முறை கூட்டணியை மாற்றி அமைப்போம். 2011 சொத்துவரி... 2024 சொத்துவரி விவரத்தை கூறி, வீடு வீடாக ஓட்டுக்கேட்போம். அ.தி.மு.க., ஆட்சியில், ஒவ்வொரு வீட்டுக்கு கிடைத்த நலத்திட்டம்; தற்போது கிடைக்கும் திட்டம் ஒப்பிட்டு பார்த்தும் ஓட்டுக்கேட்போம்... திருப்பூர் தொகுதிகள் அ.தி.மு.க., வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்து காட்டுவோம்'' என்று கூறுகின்றனர் அ.தி.மு.க., நிர்வாகிகள்.

வெற்றி பெறும் முனைப்பில் பா.ஜ.,

திருப்பூர் மாவட்டத்தில் ஒன்றிரண்டு தொகுதிகளையாவது இம்முறை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ., உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அன்றாடம் தங்கள் நிர்வாகிகள் மூலம் சந்தித்து தெரிவிப்பதை சிரமேற்கொண்டுள்ளது.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்து தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டது. வேட்பாளராக தற்போதைய மத்திய அமைச்சர் முருகன் களம் கண்டார். ஓட்டு எண்ணிக்கையில் கடைசி வரை முன்னிலையில் இருந்த பா.ஜ., கடைசி சில ரவுண்டில் கோட்டை விட்டு, தி.மு.க.,விடம் வெற்றியைப் பறிகொடுத்தது. கடந்த, நான்கு ஆண்டுகளுக்குள் பா.ஜ., தலைவர் அண்ணாமலை வருகை மற்றும் அவரது யாத்திரை, லோக்சபா தேர்தல் சந்திப்பு என, பல வகையில் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம், மக்கள் செல்வாக்கு வெகுவாக அதிகரித்துள்ளது என்கின்றனர் பா.ஜ., நிர்வாகிகள்.

இதன் காரணமாக, அவிநாசி, வடக்கு, பல்லடம், தாராபுரம் தொகுதிகளில் பா.ஜ., வின் செல்வாக்கு, தற்போதைய நிலைமை குறித்து கட்சியினர் கள ஆய்வு செய்து வருகின்றனர். அண்ணாமலை தமிழகம் திரும்பிய பின், சட்டசபை தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கும் என கட்சியினர் எதிர்பார்த்துள்ளனர். வரும் தேர்தலில் கூட்டணி போன்றவற்றை பொறுத்து, திருப்பூர் மாவட்டத்தில், ஒன்றிரண்டு தொகுதிகளில் பா.ஜ., களமிறங்க திட்டமிட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் எண்ணம்நிறைவேறுமா?

காங்கிரசில் கோஷ்டிப்பிரச்னை பிரதானமாக உள்ளது. கட்சி கூட்டங்கள், போராட்டங்களின் போது இது தலையைக் காட்டும். திருப்பூர் மாவட்டத்தில் தேர்தலில் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவாக கொடி பிடித்து, ஓட்டு கேட்டு பிரசாரம் செய்து விட்டு ஒதுங்கிக்கொள்ளும் நிலை உள்ளது. இந்த முறை திருப்பூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவு தொகுதிகளைப் பெற்று கரை சேரும் எண்ணத்தில் காங்., உள்ளது. ஆனால், கூட்டணிக்கணக்கில் இது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறி.

நம்பிக்கை மா(ற்)றாமல் 'நாம் தமிழர்'

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஏறத்தாழ 1.5 லட்சம் ஓட்டுக்களை இக்கட்சி பெற்றது. தற்போது பல்வேறு காரணங்களால் கட்சி நிர்வாகத்தில் சில மாவட்டங்களில் குழப்பம் நிலவுகிறது. இருப்பினும் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை சலசலப்புகள் இல்லை. ஓட்டு சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்ற திட்டத்துடன் கட்சியினர் உள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓட்டுகள் இக்கட்சிக்கு பெருமளவு கிடைத்ததாக கூறப்படுகிறது. விஜய் துவங்கிய கட்சியால் இவர்களுக்கான ஓட்டு சதவீதம் குறையலாம் என்று கூறப்பட்டாலும், இது நடக்காது என்கின்றனர் உள்ளூர் கட்சியினர். அரசியல் கள நிலவரங்களில் ஏற்படும் மாற்றங்கள் இக்கட்சிக்கான ஓட்டுக்களாக மாறும் என்பது மறுக்க முடியாது.

பூத் கமிட்டியை வலுவாக்கும் த.வெ.க.,

தமிழக வெற்றிக்கழகம் முதன்முறையாக சட்டசபை தேர்தலை, 2026ல் சந்திக்கப்போகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் மன்றம் சார்பில் போட்டியிட்டு தங்கள் பலத்தை சுயபரிசோதனை செய்தனர். விக்கிரவாண்டி மாநாடு திரும்பி பார்க்க வைத்துள்ளதால், சட்டசபை தேர்தலில் முழு பலத்தையும் பிரயோகிக்க தயாராகிவருகின்றனர். குறிப்பாக, மாவட்ட மற்றும் வார்டு கிளை நிர்வாகிகள் நியமித்த பிறகு, 'பூத்' கமிட்டி வலுவாக அமைக்கப்படும். இளம்பெண்கள், இளைஞர்களை கொண்டு பூத் கமிட்டி அமைத்து, தீவிர திண்ணை பிரசாரம் மூலம், மக்களை தங்கள் பக்கமாக திருப்புவோம் என்கின்றனர், த.வெ.க., நிர்வாகிகள்.

போராட்டங்களுடன்கம்யூ., கட்சிகள்

கூட்டணியைப் பொறுத்த வரை இரு கம்யூ., கட்சிகளும் தங்களுக்கான ஓட்டு வங்கி திருப்பூர் தொகுதிகளில் உள்ளது என்பதால், 'சீட்' கேட்பது வழக்கம். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதி, ஏதாவது ஒரு கம்யூ,, கட்சிக்கு வழங்க வாய்ப்புள்ளது. கூட்டணியின் பலம் காரணமாக இக்கட்சி கணிசமான ஓட்டுகளைப் பெற வாய்ப்புள்ளது. தற்போது மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டங்களை இக்கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. போராட்டம் மென்மையாகவும், பெயரளவுக்கும் இருக்கிறது என்று குற்றம் சொன்னால், 'ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தாலும், மக்கள் பிரச்னை என்றால் போராட தயங்க மாட்டோம்' என்று கம்யூ., கட்சியினர் உடனடியாக வாதம் செய்கின்றனர்.

      Dinamalar
      Follow us