/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமாங்கல்ய திட்டத்தில் தங்கம் வழங்கும் விழா
/
திருமாங்கல்ய திட்டத்தில் தங்கம் வழங்கும் விழா
ADDED : பிப் 07, 2025 08:43 PM
- நமது நிருபர் -
தமிழக அரசு, திருமண உதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், ஏழை பெண்களின் திருமணத்துக்கு, தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 2024 - 25ம் ஆண்டுக்கான திருமாங்கல்யத்துக்கு தங்கம் வழங்கும் விழா, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி வரவேற்றார்.
அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், பயனாளி பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கு தங்கம் வழங்கினர். மொத்தம் 173 பெண்களுக்கு, 74 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், 1.384 கிலோ தங்கமும் வழங்கப்பட்டது.
அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''தமிழக அரசு, பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2021 - 2022 முதல் 2024 - 25 ம் ஆண்டு வரை, 3,243 பெண்களுக்கு, மொத்தம் 13 கோடியே 76 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், 25.944 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.