/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு பஸ்; தேர்வு எழுத முடியாமல் மாணவர் பரிதவிப்பு

ADDED : மார் 10, 2024 12:38 AM
அவிநாசி:அவிநாசி, மடத்துப்பாளையம் ரோட்டை சேர்ந்த சந்திரன் மகன் அஜய். கோவை, அவிநாசி ரோட்டிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல அவிநாசியில் இருந்து கோவைக்கு அரசு பஸ்சில், அவரும், அவரது மூன்று நண்பர்களும் சென்றனர்.
கல்லுாரியை தாண்டி, ஹோப் காலேஜ் பஸ் ஸ்டாப்பில், இறக்கி விட்டனர். இதனால், கல்லுாரிக்கு நடந்தே சென்றதால், செய்முறை தேர்வு எழுத முடியவில்லை.
இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் தரப்பில் கல்லுாரி நிர்வாகத்திடம் விளக்கிய பின்னரே, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல நிர்வாக இயக்குனர் ஜோசப் பயாஸிடம் கேட்டதற்கு, ''உடனடியாக டிரைவர் மற்றும் நடத்துனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க பொது மேலாளருக்கு பரிந்துரை செய்துள்ளேன்,'' என்றார்.