ADDED : டிச 21, 2024 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: சென்சுரி பள்ளிக்குழுமத்தைச் சேர்ந்த தி ேஹாம் ஸ்கூலில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் டாக்டர் சக்திதேவி, அறங்காவலர்கள் மனோகரன், மித்ரஹரிகுமார், மிதிலேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பள்ளி முதல்வர் ராஜ்குமார், வரவேற்று பேசுகையில், இப்பள்ளி பிற பள்ளிகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை எடுத்துக்கூறினார். பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களைச் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
மாணவர்களின் நடனம், நாடகம், நிழல் நாடகம், கராத்தே, சிலம்பம், களரி ஆகியன நடந்தன. சுப்ரஜா, 'இளம்தளிர்' என்ற காணொலி நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ப்பு முறை, விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பெற்றோர்கள், குழந்தைகளின் திறன்களைக் கண்டு வியந்தனர்.