/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லை
/
சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லை
ADDED : ஜூலை 22, 2025 10:05 PM
உடுமலை; உடுமலை நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், சமூக விரோத செயல்கள் அரங்கேறும் மையமாக மாறியுள்ளது.
அனைத்து தரப்பு மக்களும் சிகிச்சை பெறும் வகையில், அரசு சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அவ்வகையில், உடுமலை நகரின் தெற்கு பகுதியிலுள்ள மக்கள் பயன்பெறும் வகையில், ராமசாமி நகரில், 25 லட்சம் ரூபாய் செலவில், இரு ஆண்டுக்கு முன், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
தினமும் நுாற்றுக்கணக்கான நோயாளிகள், கர்ப்பிணிகள் வந்து செல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்ட போது, சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை.
இதனால், இரவு நேரங்களில், மது அருந்தும் இடமாகவும், சமூக விரோத செயல்கள் அரங்கேறும் மையமாகவும் மாறியுள்ளது.
பகல் நேரங்களிலும், நாய்கள், மாடுகள் மட்டுமின்றி, போதை ஆசாமிகள் ஆக்கிரமித்துக்கொள்வதால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால், அப்பகுதி மக்களும் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சுற்றுச்சுவர், மின் விளக்கு உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை சுகாதாரத்துறையினர் செய்ய வேண்டும்.