/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆனி திருமஞ்சனம்; திருவாசகம் முற்றோதல்
/
ஆனி திருமஞ்சனம்; திருவாசகம் முற்றோதல்
ADDED : ஜூலை 01, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், கரட்டாங்காடு, குலால சமுதாய முன்னேற்ற சங்கத்தில், ஆனி திருமஞ்சன விழா நேற்று நடந்தது.
கரட்டாங்காடு மண்டபத்தில், அதிகாலை, 6:30 மணிக்கு, ஸ்ரீஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், மாணிக்கவாசகர், திருநீலகண்ட நாயனார் மற்றும் ரத்தினாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரபூஜை நடந்தது.
தொடர்ந்து, உடுமலை அய்யாசாமி குழுவினர் முன்னிலையில், சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள், திருவாசகம் முற்றோதல் செய்தனர். மதியம், அன்னம்பாலிப்பு பூஜையும், மகாதீபாராதனையும் நடந்தது.