/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தங்கையை கொன்றவர் மீது குண்டாஸ் பாய வேண்டும்'
/
'தங்கையை கொன்றவர் மீது குண்டாஸ் பாய வேண்டும்'
ADDED : ஏப் 04, 2025 03:26 AM
பொங்கலுார்; பல்லடம் அடுத்த பருவாயை சேர்ந்தவர் தண்டபாணி; இவரது மகன் சரவணன், 24; மகள் வித்யா, 21. கோவை அரசுக்கல்லுாரியில் படித்து வந்த வித்யா, திருப்பூர் விஜயாபுரத்தைச் சேர்ந்த வெண்மணி என்பவரை காதலித்துள்ளார். இது அவரது அண்ணனுக்கு பிடிக்கவில்லை. வித்யா தன் அண்ணனிடம் சில மாதங்களாக பேசாமல் இருந்துள்ளார்.
கடந்த, 30ம் தேதி பெற்றோர் சர்ச்சுக்கு சென்ற போது தங்கையை அரிவாளால் தாக்கி கொலை செய்துவிட்டு, பீரோ விழுந்ததால் இறந்ததாக நாடகமாடினார்.
காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, சரவணனை கைது செய்தனர். சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் காமநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். கோவை மாவட்ட செயலாளர் ஸ்டீபன் சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

