sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அதிநவீனங்களின் 'ஆட்சி' கம்பீர நடைபோடும் பின்னலாடை தொழில் துறை

/

அதிநவீனங்களின் 'ஆட்சி' கம்பீர நடைபோடும் பின்னலாடை தொழில் துறை

அதிநவீனங்களின் 'ஆட்சி' கம்பீர நடைபோடும் பின்னலாடை தொழில் துறை

அதிநவீனங்களின் 'ஆட்சி' கம்பீர நடைபோடும் பின்னலாடை தொழில் துறை


ADDED : ஆக 09, 2025 11:57 PM

Google News

ADDED : ஆக 09, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : ''புதிய தொழில்நுட்பங்களால் நிரம்பியுள்ள 'நிட்ேஷா' கண்காட்சி, தொழில்துறைக்கு பயனுள்ளதாக உள்ளது'' என்று கண்காட்சியைப் பார்வையிட்ட தொழில்துறையினர் கூறினர். இன்று நிறைவு நாள் என்பதால், கண்காட்சியில் தொழில்துறையினர் வருகை அதிகமாக இருக்கும்; இயந்திர வர்த்தகம் மற்றும் வர்த்தக விசாரணைகள் களைகட்டும்.

திருப்பூர், காங்கயம் ரோடு, டாப் லைட் வளாகத்தில் 'நிட்ேஷா' பின்னலாடை இயந்திரக் கண்காட்சி நேற்றுமுன்தினம் துவங்கியது. இன்றுடன் நிறைவு பெறுகிறது. கண்காட்சியில், ஐந்து அரங்குகள், 450 ஸ்டால்களிலும், புதிய தொழில்நுட்பமும், புது வரவுகளும் நிரம்பியுள்ளதாக, தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கண்காட்சியின் இரண்டாவது நாளான நேற்று, அனைத்து அரங்குகளிலும் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. தொழில்துறையினர், அந்தந்த துறைசார்ந்த ஸ்டால்கள் மட்டுமல்லாது, அனைத்து ஸ்டால்களையும் வரிசையாக பார்வையிட்டு, புதிய தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தனர்.

இன்று நிறைவு நாள் என்பதால் தொழில்துறையினர் வருகை அதிகளவில் இருக்கும். வர்த்தகம் மற்றும் வர்த்தக விசாரணைகள் களைகட்டப்போகின்றன.

கண்காட்சி குறித்து தொழில்துறையினர் கருத்துகள்:

நிதியுதவியின் அவசியம் தனசேகர், நிதி ஆலோசகர், சென்னை:

கண்காட்சிகளில், புதிய தொழில்நுட்பத்தில் உருவான அதிநவீன மெஷின்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் வாங்க, வங்கிகள் நிதியுதவி செய்வது போல், மெஷின்கள் வாங்க அதற்கு ஏற்ற வகையில் நிதியுதவி கிடைக்க வேண்டும் என தொழில்துறையினர் விரும்புகின்றனர். அதற்காகவே, பல்வேறு நிதி நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்று, மெஷின்கள் வாங்க உதவி செய்கின்றன. நிதி இல்லாமல், மெஷின் வாங்குவது தள்ளிப்போகக்கூடாது என்று, நாங்களும் சேவை வழங்கி வருகிறோம்.

அதிவேக செயல்பாடு யுவராஜ், பிரின்டிங் நிறுவன உரிமையாளர்:

கண்காட்சியில் புதிய தொழில்நுட்பங்கள் அதிகம் வந்துள்ளன. பிரின்டர்களில் இணைக்கும் வகையில், புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. இதுவரை இல்லாத அளவு, அதிவேகமாக பிரின்டிங் செய்யும் மெஷின்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இரட்டிப்பு வேகத்தில் இயங்கும் மெஷின்கள் வந்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது. ஏற்றுமதியாளர் மட்டுமல்ல; ஒவ்வொரு பனியன் நிறுவனத்தினரும் பார்வையிட வேண்டும்.

பயனளிக்கும் 'அக்சசரீஸ்' சுப்பிரமணியம், ஏற்றுமதியாளர், கரூர்:

'நிட்ேஷா' கண்காட்சியில் ஆண்டுதோறும் பார்வையிடுவது வழக்கம். பின்னலாடை மட்டுமல்லாது, ஜவுளித்துறைக்கு தேவையான மெஷின்களும் வந்துள்ளன. அத்துடன், 'அக்சசரீஸ்' புதிதாக வந்துள்ளது, மிகவும் பயனளிக்கும்.

அதிக இயந்திரங்கள் கார்த்திகேயன், வர்த்தகர், திருப்பூர்:

கண்காட்சியில், பின்னலாடை தொழில்சார்ந்த உற்பத்தி இயந்திரங்கள் அதிகம் வந்துள்ளன; இருப்பினும், 'அக்சசரீஸ்' வழக்கத்தைவிட குறைவாக இருந்தது; இருப்பினும், பின்னலாடை பிரின்டிங், நிட்டிங் மற்றும் எம்ப்ராய்டரிங் பிரிவில் அதிக மெஷின்கள் வந்துள்ளன.

பிரின்டிங் முக்கியத்துவம் பரத்வாஜ், நிட்டிங் நிறுவன உரிமையாளர், திருப்பூர்:

கண்காட்சியில், பிரின்டிங் பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளனர். ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. நிட்டிங் ஸ்டால்கள் குறைவு என்றாலும், புதிய மெஷின்கள் வந்துள்ளன; அதிகம் விற்பனையும் நடந்துள்ளது. 'ரிப்' மெஷின்கள் தான் அதிகம் உள்ளன. இனிமேல், 'நிட்டிங்' பிரிவிலும் கூடுதல் ஸ்டால்கள் அமைக்கப்பட வேண்டும்.

இன்னும் வர வேண்டும் பாலச்சந்தர், உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்:

வழக்கமான 'சூயிங்' மெஷின்களும், தானியங்கி தொழில்நுட்பத்துடன் கூ டிய மெஷின்கள் அதிகம் வந்துள்ளன. இருப்பினும், வழக்கமான நிறுவனங்கள் மட்டும் வந்துள்ளன; பெங்களூரு கண்காட்சிக்கு வருவது போல், கூடுதல் நிறுவனங்கள் திருப்பூருக்கு வந்து ஸ்டால் அமைக்க வேண்டும்.

தேர்வு செய்ய வசதி பிரகாஷ், உள்ளாடை உற்பத்தியாளர்:

திருப்பூரில் 'நிட்ேஷா' கண்காட்சி நடத்துவது, ஆண்டுதோறும் 'அப்டேட்' செய்ய உதவியாக இருக்கிறது. ஒவ்வொரு அரங்குகளும், புதிய தொழில்நுட்பம் மற்றும் புதுவரவுகளால் நிரம்பியிருக்கிறது. தொழில்துறையினர் ஆர்வத்துடன் பார்வையிட்டு, முழுமையாக விசாரித்து, அதற்கு ஏற்ப மெஷின்களை தேர்வு செய்யவும் வசதியாக இருக்கிறது.






      Dinamalar
      Follow us