/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குடிநீர் கேன் ஒளி ஊடுருவும் தன்மை 85 சதவீதம் இருக்க வேண்டும்'
/
'குடிநீர் கேன் ஒளி ஊடுருவும் தன்மை 85 சதவீதம் இருக்க வேண்டும்'
'குடிநீர் கேன் ஒளி ஊடுருவும் தன்மை 85 சதவீதம் இருக்க வேண்டும்'
'குடிநீர் கேன் ஒளி ஊடுருவும் தன்மை 85 சதவீதம் இருக்க வேண்டும்'
ADDED : ஏப் 05, 2025 11:35 PM
திருப்பூர்: குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு போஸ்டேக் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமை தாங்கி பேசியதாவது:
குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள், முழுமையான தண்ணீர் சுத்திகரிப்பு முறையை பின்பற்றி, தண்ணீர் சுத்தமாக இருப்பதை உறுதி செய்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தன் சுத்தத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியம். பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவ சான்றிதழை பெற்று இருக்க வேண்டும். தரை மட்ட குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
மாதத்துக்கு ஒரு முறையாவது குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தங்களால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும் குடிநீரை தரம் உயர்த்தப்பட்ட என்.ஏ.பி.எல்., ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்து, அதன் ஆய்வு அறிக்கையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மீண்டும் பயன்படுத்த கூடிய, 20 லிட்டர் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது, அதன் பிளாஸ்டிக் தன்மை மாறிவிடும். அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்து விடும் அபாயம் உள்ளது.
எனவே, அதனை தவிர்க்கும் பொருட்டு, தண்ணீர் நிரப்பப்படும், 20 லிட்டர் குடிநீர் கேன்கள், 85 சதவீதம் ஒளி ஊடுருவும் வெளிப்படை தன்மையுடன் துாய்மையாக இருந்தால் மட்டுமே குடிநீரை நிரப்ப வேண்டும். கேன்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இதில், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

