/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒளிராத விளக்குகள்... ஓயாத நாய் தொல்லை!
/
ஒளிராத விளக்குகள்... ஓயாத நாய் தொல்லை!
ADDED : நவ 25, 2024 10:57 PM

ஒளிராத விளக்கு
திருப்பூர், அவிநாசி ரோடு, சி.எஸ்.ஐ., சர்ச் பின் இந்திரா நகர் இரண்டாவது வீதியில் தெருவிளக்கு எரிவதில்லை. வீதி முழுதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
- சுப்பு, கே.பி.என்., காலனி. (படம் உண்டு)
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் ரயில்வே மேம்பாலத்தில், பத்துக்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரிவதில்லை. மாநகராட்சியிடம் பல முறை புகார் தெரிவித்தும் சரிசெய்யவில்லை.
- புவனேஷ், ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)
திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன், சபாபதிபுரம் ரயில்வே பாலத்தின் கீழ் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. அடிக்கடி வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடக்கிறது.
- லோகநாதன், சபாபதிபுரம். (படம் உண்டு)
துாக்கி எறிவதா?
கணியாம்பூண்டி, நவரத்னா அப்பார்மென்ட் பகுதியில் இறந்து விடும் விலங்கினங்களை துாக்கி எறிவது வாடிக்கையாக உள்ளது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- ஜான், கணியாம்பூண்டி. (படம் உண்டு)
கழிவுநீரால் அவதி
திருப்பூர் ஆறாவது வார்டு, கவுண்டநாயக்கன்பாளையம் - தொட்டியமண்ணரை வழியில் சாக்கடை கால்வாய் வசதியில்லை. கழிவுநீர் ரோட்டில் செல்வதால், சாலையும் சேதமாகிறது.
- சசிக்குமார், கவுண்டநாயக்கன்பாளையம். (படம் உண்டு)
திருப்பூர், ராயபுரம் அடுத்த, ஸ்டேட் பேங்க் காலனியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. கழிவுநீரை மிதித்தபடி வீடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
- தமிழரசன், ஸ்டேட் பேங்க் காலனி. (படம் உண்டு)
கால்வாய் மீது ஆக்கிரமிப்பு
திருப்பூர், மேட்டுப்பாளையம், வெங்கடேஸ்வரா நகர் மூன்றாவது வீதி, சவுண்டம்மன் கோவில் பின்புற வீதியில் கால்வாய் மீது ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், கால்வாய் சுத்தம் செய்ய முடிவதில்லை.
- பாலு, வெங்கடேஸ்வரா வீதி. (படம் உண்டு)
திருப்பூர், லட்சுமி நகர் முதல் வீதியில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டி ஒரு ஆண்டாகி விட்டது. பணி முடிந்தும் கான்கீரிட் ரோடு போடவில்லை. பலமுறை மனு அளித்தும் ரோடு ரோடு போடும் பணி துவங்கவில்லை.
- மணி, லட்சுமி நகர். (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
பல்லடம், கணபதிபாளையம் - பொங்கலுார் ரோட்டில் அரசு பள்ளி அருகே கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.
- பாலா, கணபதிபாளையம். (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், காங்கயம் ரோடு, 49 வது வார்டு, பத்மினி கார்டனில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகி, சாலையே சேதமாகியுள்ளது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- ராஜேந்திரன், தில்லைநகர். (படம் உண்டு)
திருப்பூர், 60 வது வார்டு, ஜி.என்., கார்டனில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. சாக்கடை கால்வாய் அருகிலேயே இருப்பதால், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது.
- கிருஷ்ணா, ஜி.என்., கார்டன். (படம் உண்டு)
குடிநீர் குழாய் சேதம்
திருப்பூர் - பல்லடம் ரோடு, நொச்சிபாளையம் பிரிவு சந்திப்பில் மழைக்கால துப்புரவு பணி நடந்த போது, குடிநீர் குழாய் சேதமானது. ஒரு ஆண்டுக்கு மேலாகியும் குழாய்கள் சீரமைக்காமல் அப்படியே விட்டுள்ளனர்.
- மோகன், நொச்சிபாளையம் பிரிவு. (படம் உண்டு)
குழியை மூடுங்க...
திருப்பூர், அங்கேரிபாளையம் - ஆத்துப்பாளையம் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. கனரக வாகன ஓட்டிகளே தடுமாறுகின்றனர். குழியை மூடி, ரோடு போட வேண்டும்.
- விஜி, கூட்டுறவு நகர். (படம் உண்டு)
தெருநாய்த்தொல்லை
செங்குந்தபுரத்தில் தெருநாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.
- அருண், செங்குந்தபுரம். (படம் உண்டு)
குப்பை அள்ளுங்க...
சேவூர் - அவிநாசி ரோடு, மூலகுரும்பபாளையம், அத்திக்கடவு குடிநீர் குழாய் செல்லும் பாதையில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுவதால், குப்பை அள்ள வேண்டும்.
- தீபக், மூலக்குரும்பபாளையம். (படம் உண்டு)
* திருப்பூர், அரண்மனைப்புதுார் இரண்டாவது வீதி, குறிஞ்சிநகரில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். வழிநெடுகிலும் குப்பை கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது.
- ஜெகதீஸ், அரண்மனைப்புதுார். (படம் உண்டு)
ரியாக் ஷன்
குப்பை அள்ளிட்டாங்க...
திருப்பூர், 15 வேலம்பாளையம், சொர்ணபுரி ைஹலேண்ட் பகுதியில் குப்பை தேங்கியிருப்பது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் மூலம் குப்பைகள் அள்ளப்பட்டு விட்டது.
- பாஷ்யம், சொர்ணபுரி ைஹலேண்ட். (படம் உண்டு)
- பாஷியம், சொர்ணபுரி ைஹலேண்ட்.