/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை திருக்கல்யாண உற்சவம்
/
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை திருக்கல்யாண உற்சவம்
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை திருக்கல்யாண உற்சவம்
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஏப் 14, 2025 10:21 PM

உடுமலை,; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நாளை அம்மன் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும், 17ம் தேதி, திருத்தேரோட்டமும் நடக்கிறது.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 1ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, கம்பம் போடுதல், கொடியேற்றம், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
திருவிழாவை முன்னிட்டு, தினமும் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம், ரிஷப வாகனத்திலும், நேற்று மாலை, 7:00 மணிக்கு, அன்ன வாகனத்திலும் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று தமிழ்ப்புத்தாண்டு தினம் என்பதால், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. நுாற்றுக்கணக்கான பக்தர்கள், தீர்த்தம் எடுத்து வந்து, திருக்கம்பத்திற்கு ஊற்றியும், நேர்த்திக்கடனாக, பூவோடு எடுத்து வந்தும் வழிபட்டனர்.
இன்று இரவு, 10:00 மணிக்கு பூவோடு நிறைவு நிகழ்ச்சியும், நாளை (16ம் தேதி) அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு, பிற்பகல், 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம், வரும், 17ம் தேதி, மதியம், 4:15 மணிக்கு நடக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் மற்றும் குட்டை திடலில், தினமும் ஆன்மிக பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.