/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
/
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
ADDED : டிச 23, 2024 04:26 AM

அவிநாசி : அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1989 --1991ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அவிநாசி - அன்னுார் ரோட்டில் உள்ள சரவண மஹாலில் நடந்தது.
முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள், அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களாக இருந்தவர்களுக்கு சால்வை அணிவித்தனர். மலரும் நினைவுகளையும், தற்போதைய வாழ்க்கைச் சூழலையும் பகிர்ந்துகொண்டனர். ஹரியானா, ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை கார்த்திகேயன், ஈஸ்வரமூர்த்தி, செந்தில்வேலவன், செந்தில்குமார் ஆகியோர் ஒருங் கிணைத்தனர்.
விளையாட்டுப் போட்டிகள், கலந்துரையாடல் ஆகியன நடந்தன. அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 85 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.