ADDED : டிச 20, 2024 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; கோவை - திருச்சி ரோடு, பொங்கலுார் கருணைபாளையத்திலிருந்து கொடுவாய் அருகே உள்ள ஓலப்பாளையம் வரை பல ஆண்டுகளுக்கு முன் ரோடு போடப்பட்டது.
அந்த ரோட்டில் ஏராளமான மண் லாரிகள் சென்றதால் ரோடு பலத்த சேதம் அடைந்து விட்டது. பல ஆண்டு காலமாக அந்த ரோட்டை சீரமைத்து தராமல் அரசு கிடப்பில் போட்டுள்ளது.
அவ்வழியே செல்லும் வர்த்தகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் இன்னலுக்கு உள்ளாகின்றனர். உடனடியாக தார் ரோடு போட்டு தர வேண்டும்.

