ADDED : ஆக 23, 2025 12:29 AM

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டம், மார்ச் 1ல் துவங்கியது; மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது இலக்கு; நேற்று வரை, 1.26 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
பல்லடம் அடுத்த, வி.கள்ளிப்பாளையம் பரம்பொருள் தோட்டத்தில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன. கோவையை சேர்ந்த டாக்டர் துரைராஜ் - உண்ணம்மாள் ஆகியோருக்கு சொந்தமான, கள்ளிப்பாளையம் தோட்டத்தில் மரக்கன்று நடப்பட்டது.
நில உரிமையாளர் குடும்பத்தினர் டாக்டர் சோமு, தம்பி ஆகியோர், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர். மலைவேம்பு - 1,250, கறிப்பலா -200, மா -120, பலா -100 என, 1,670 மரக்கன்றுகள் நடப்பட்டது.
'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், இலவசமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.