/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்நோக்கு மைய கட்டடம் திறக்கும் முன்பே விரிசல்
/
பல்நோக்கு மைய கட்டடம் திறக்கும் முன்பே விரிசல்
ADDED : அக் 23, 2024 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பல்லடம் அடுத்த பருவாய் ஊராட்சிக்குட்பட்ட இடையர்பாளையம் கிராமத்தில், முன்னாள் எம்.பி., நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு மைய கட்டடம் கட்டப்பட்டது. எம்.பி.,யின் பதவி காலம் முடிந்து, தற்போது புதிய எம்.பி.,யாக கணபதி ராஜ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்.பி., மாறிய பிறகும் கட்டடம் திறப்பு விழா செய்யப்படவில்லை.
ஒரு ஆண்டாக திறப்பு விழா செய்யப்படாமல், பயன்பாட்டுக்கு வராத இக்கட்டத்தின் சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

