/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் திருப்பதி கோவிலில் பவித்ரோத்ஸவ விழா துவக்கம்
/
திருப்பூர் திருப்பதி கோவிலில் பவித்ரோத்ஸவ விழா துவக்கம்
திருப்பூர் திருப்பதி கோவிலில் பவித்ரோத்ஸவ விழா துவக்கம்
திருப்பூர் திருப்பதி கோவிலில் பவித்ரோத்ஸவ விழா துவக்கம்
ADDED : ஜூலை 20, 2025 06:53 AM

திருப்பூர் : திருப்பூர் திருப்பதி என்று அழைக்கப்படும், திருப்பூர் ஸ்ரீவெங்கடேஸ்வரபெருமாள் கோவிலில், பவித்ரோத்ஸவ விழா துவங்கியுள்ளது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டிலுள்ள இக்கோவிலில், கடந்த 18ம் தேதி மாலை, ஸ்ரீதேவி பூதேவி சமேத நம்பெருமாள் திருக்கல்யாண உற்சவத்துடன் விழா துவங்கியது. மாலையில், புண்யாஹவாசனம், வாஸ்துசாந்தி பூஜைகள் நடந்தது நேற்று காலை, கும்ப ஸ்தாபனம் பவித்ரம் சாற்றுதல், யாகசாலை பூஜைகள் நடந்தது.
மதியம் சாற்றுமறையும், மாலையில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. இன்று காலை, யாகசாலை பூஜைகளும், புறப்பாடு, சாற்றுமறை பூஜைகளும் நடக்க உள்ளது. நாளை (21ம் தேதி), காலை, 8:00 மணிக்கு, நித்ய திருவாராதனம், பெருமாள் புறப்பாடு, யாகசாலை சாந்தி ேஹாமங்கள், 81 கலச திருமஞ்சனம், தீர்த்தவாரி, கும்ப புராக்ஷனம் பூஜைகள் நடக்கின்றன. மாலை, 5:00 மணிக்கு, திருப்பாவாடை, சாற்றுமறையை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுமென, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.