/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பஸ்சில் கண்டக்டரை சுத்தியலால் அடித்தவர் கைது
/
அரசு பஸ்சில் கண்டக்டரை சுத்தியலால் அடித்தவர் கைது
அரசு பஸ்சில் கண்டக்டரை சுத்தியலால் அடித்தவர் கைது
அரசு பஸ்சில் கண்டக்டரை சுத்தியலால் அடித்தவர் கைது
ADDED : நவ 10, 2024 02:39 AM

உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை, சிவசக்தி காலனியை சேர்ந்தவர் இஸ்மாயில், 34; அரசு பஸ் கண்டக்டர். உடுமலை - கணியூர் வழித்தடத்தில் இயங்கும் பஸ்சில் பணியில் இருந்தார். நேற்று மதியம், 1:30 மணியளவில், மடத்துக்குளம் நால் ரோடு பகுதியில் பஸ் சென்ற போது, மருள்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன், 34, பஸ்சில் ஏறியுள்ளார்.
திடீரென மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து, கண்டக்டரின் முதுகில் சரமாரியாக தாக்கியுள்ளார். நிலை தடுமாறி விழுந்த நிலையிலும், கால், முகம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்கினார். அதிர்சியடைந்த பயணியர் மற்றும் டிரைவர், கண்டக்டரை மீட்டு, மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கார்த்திகேயனை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் கூறுகையில், 'டைல்ஸ் ஒட்டும் பணி செய்யும் கார்த்திகேயன் மனைவியுடன், இஸ்மாயில் நான்கு மாதங்களாக போனில் பேசி, பழகி வந்துள்ளார். ஆத்திரமடைந்த கார்த்திகேயன், அவரை தாக்கியுள்ளார். அவரை கைது செய்துள்ளோம்' என்றனர்.