/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பாதாளம்' ஆகும் குளங்கள் மண் மாபியாக்கள் அட்டூழியம்
/
'பாதாளம்' ஆகும் குளங்கள் மண் மாபியாக்கள் அட்டூழியம்
'பாதாளம்' ஆகும் குளங்கள் மண் மாபியாக்கள் அட்டூழியம்
'பாதாளம்' ஆகும் குளங்கள் மண் மாபியாக்கள் அட்டூழியம்
ADDED : ஆக 10, 2025 10:43 PM

பொங்கலுார்:
குளங்களில் வண்டல் மண் எடுப்பதாக கூறி பாதாளம் வரை மண்ணை வெட்டி எடுத்து, பாறைக்குழியாக மாற்றி வருவது விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டுதோறும் குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அரசு அனுமதி கொடுக்கிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை உண்மையான விவசாயிகள் வண்டல் மண் எடுப்பது அரிதாக உள்ளது. ஏனெனில் வண்டல் மண்ணே கிடைப்பதில்லை. வண்டல் மண் என்ற போர்வையில் கிராவல் மண் எடுத்து விற்பனை செய்வது மட்டுமே நடக்கிறது.
''உப்பாறு, கத்தாங்கண்ணி, பாரத்தொழுவு உள்ளிட்ட ஒரு சில குளங்களில் மட்டும் குறைந்த அளவே வண்டல் மண் உள்ளது; மாவட்டத்தில் உள்ள, 95 சதவீத குளங்களில் வண்டல் மண்ணே கிடையாது'' என்கின்றனர் விவசாயிகள்.
மாவட்டம் முழுவதும் நில மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதால் மண் விலையும் உயர்ந்துள்ளது. கிராவல் மண்ணுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மண் மாபியாக்களின் முக்கிய இலக்காக கோவில் நிலங்கள், பஞ்சமி நிலம், குளம் போன்றவையே உள்ளன. 'துார்வாருகிறேன்' என்ற போர்வையில் குளங்கள் இன்று பாதாளம் வரை வெட்டி எடுக்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் குளங்களே இருக்காது. வெறும் பாறைக்குழிகளாகவே இருக்கும். தற்போது நிலத்தடி நீர்மட்டம் சரிந்து காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நீர்நிலைகள் அழிக்கப்பட்டால் அதன் பின்விளைவுகள் கொடூரமானதாக இருக்கும். எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும்.
குளங்களைக் காப்பாற்ற அரசின் அதிரடி நடவடிக்கை தேவை.
----
படம் 3 காலம்
பொங்கலுார், காரப்பாளையத்தில் உள்ள குட்டையில் பாதாளம் வரை மண் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.