ADDED : நவ 14, 2024 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் பிரிவில் குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. சாலையில் நீர் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை செப்பனிட வேண்டும்' என, பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில், நெடுஞ்சாலை உதவி பொறியாளர் மலர்விழி, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் அன்பரசன் ஆகியோர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
'விரைவில் தீர்வு ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்' என, நுகர்வோர் சங்கத்தினர் கூறினர்.

