/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் கொண்டாட்டம் ;சிலம்பாட்டம் அபாரம்
/
பொங்கல் கொண்டாட்டம் ;சிலம்பாட்டம் அபாரம்
ADDED : ஜன 09, 2024 12:40 AM
திருப்பூர்:திருப்பூர், புது ராமகிருஷ்ணாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழ் சிலம்ப பயிற்சி மையம் சார்பில், பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவர்கள், பொங்கல் வைத்து, வழிபட்டு, சிலம்பம் விளையாடி, பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பயிற்சி மைய ஆசிரியர் கிருஷ்ணன் கூறுகையில், ''தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலைக்கும், பொங்கல் பண்டிகைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பெரும்பாலான மாணவ, மாணவியர், வெளியூரை சேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்கள் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றுவிடுவர் என்பதால் முன்கூட்டியே எளிமையாக விழாவை கொண்டாடினோம்; தமிழர் கலாசாரம், பரம்பரியத்தை மாணவ, மாணவியர் அறிந்து கொண்டனர்,'' என்றார்.