/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொப்பரை விலை தொடர்ந்து அதிகரிப்பு
/
கொப்பரை விலை தொடர்ந்து அதிகரிப்பு
ADDED : செப் 27, 2024 11:21 PM

உடுமலை: உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ் நடந்த கொப்பரை ஏலத்தில், கிலோ, ரூ.140க்கு விற்பனையானது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
ஏலத்திற்கு, சின்ன வீரம்பட்டி, தளி, உடுமலை, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, கண்ணமநாயக்கனுார், புக்குளம், பூலாங்கிணர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 35 விவசாயிகள், 147 மூட்டை அளவுள்ள, 7,350 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ - நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 10 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
முதல் தரம், ரூ.128.86 முதல், ரூ.140 வரையும், இரண்டாம் தரம், ரூ.95.69 முதல், 125.99 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.
ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
தென்னையில், மகசூல் குறைந்து, கொப்பரை உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால், கொப்பரை விலை உயர்ந்து வருகிறது.
அதே போல், உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள், இ - நாம் வாயிலாக, கொப்பரை ஏலத்தில் பங்கேற்பதால், அதிக விலை கிடைத்து வருகிறது.
மேலும், இங்கு கொப்பரை தரம் பிரித்து, வைக்கப்படுவதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது.
இவ்வாறு, தெரிவித்தார்.