/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உச்சம் தொட்ட கொப்பரை விலை கிலோ ரூ. 235.10க்கு விற்பனை
/
உச்சம் தொட்ட கொப்பரை விலை கிலோ ரூ. 235.10க்கு விற்பனை
உச்சம் தொட்ட கொப்பரை விலை கிலோ ரூ. 235.10க்கு விற்பனை
உச்சம் தொட்ட கொப்பரை விலை கிலோ ரூ. 235.10க்கு விற்பனை
ADDED : ஜூன் 13, 2025 09:50 PM

உடுமலை,; உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு, அதிகபட்ச விலையாக ஒரு கிலோ ரூ. 235.10க்கு விற்பனையானது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேசிய வேளாண் சந்தை (இ - நாம்) திட்டத்தின் கீழ், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்றுமுன்தினம் நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து, 18 விவசாயிகள், 109 மூட்டை அளவுள்ள., 5,450 கிலோ கொப்பரை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த மறைமுக ஏலத்தில், ஏழு நிறுவனங்கள் பங்கேற்றன.முதல் தரம், ஒரு கிலோ ரூ.220 முதல், ரூ.235.10 வரையும், இரண்டாம் தரம், ரூ.150.66 முதல், ரூ. 216.17 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.
இத்தகவலை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் சண்முக சுந்தரம், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தனர்.