/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கான்கிரீட் கால்வாயாக மாற்றும் திட்டம் இழுபறி புதர் மண்டி மாயமாகும் ஓடை
/
கான்கிரீட் கால்வாயாக மாற்றும் திட்டம் இழுபறி புதர் மண்டி மாயமாகும் ஓடை
கான்கிரீட் கால்வாயாக மாற்றும் திட்டம் இழுபறி புதர் மண்டி மாயமாகும் ஓடை
கான்கிரீட் கால்வாயாக மாற்றும் திட்டம் இழுபறி புதர் மண்டி மாயமாகும் ஓடை
ADDED : பிப் 03, 2025 04:52 AM

உடுமலை : உடுமலையில், மழை நீர் ஓடையில் கான்கிரீட் கரை கட்டுமான பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
உடுமலை நகர பகுதியில், இயற்கை நீர் வழித்தடங்களாக தங்கங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம் ஓடை, நாராயணன் காலனி ஓடை, திருப்பூர் ரோடு ஓடை உள்ளிட்டவை அமைந்துள்ளன.
நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளாலும், புதர் மண்டி காணப்படுவதாலும், மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த, 5 ஆண்டுக்கு முன், நகராட்சி நுாற்றாண்டு சிறப்பு நிதியின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், நீர் வழித்தடங்கள் முழுவதும் கான்கிரீட் கால்வாயாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதில், தங்கம்மாள் ஓடை, நாராயணன் காலனி ஓடை பகுதிகளில், ஒரு சில பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், திட்ட வடிவமைப்பு அடிப்படையில் முழுமையாக பணிகள் மேற்கொள்ளவில்லை.
நாராயணன் காலனி பகுதியில் இரு புறமும் கான்கிரீட் கரை அமைத்த நிலையில், தளம் அமைக்கவில்லை. அதே போல், பழநி ரோட்டிலிருந்து, யு.கே.சி., நகர் ஓடையை இணைக்கும் வகையில், அமைந்துள்ள ஓடை பகுதியில், 50 மீட்டர் நீளத்திற்கு பணி மேற்கொள்ளாமல், மண் மூடியும், புதர் மண்டியும் காணப்படுகிறது.
நுாற்றாண்டு சிறப்பு நிதி, ரூ.50 கோடி வரை செலவிடப்படாமல் உள்ள நிலையில், நிலுவையிலுள்ள திட்ட பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
கழுத்தறுத்தான் பள்ளம் ஓடையில், பழநி ரோடு முதல், யு.கே.சி., நகர் ஓடை வரை, தளம் மற்றும் இரு கரைகளையும் கான்கிரீட் கரைகளாக மாற்றவும், மழையில்லாத போது, எளிதாக கழிவு நீர் செல்லும் வகையில், பேபி கால்வாயுடன் கூடிய மழை நீர் வடிகால் அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

