/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இரவில் பூத்த பிரம்ம கமலம் பொதுமக்கள் கண்டு வியப்பு
/
இரவில் பூத்த பிரம்ம கமலம் பொதுமக்கள் கண்டு வியப்பு
இரவில் பூத்த பிரம்ம கமலம் பொதுமக்கள் கண்டு வியப்பு
இரவில் பூத்த பிரம்ம கமலம் பொதுமக்கள் கண்டு வியப்பு
ADDED : ஜூன் 20, 2025 02:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை தேவனுார்புதுார் குடியிருப்பு ஒன்றில், பூத்த பிரம்ம கமலம் என்ற நிஷாகந்தி பூவை அப்பகுதியினர் கண்டு ரசித்தனர்.
பல்வேறு மருத்துவ குணம் கொண்ட 'பிரம்ம கமலம்' என அழைக்கப்படும் நிஷாகந்தி பூ, குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே பூக்கக்கூடியது.
இதன் மொட்டு உருவாகி, அவை பூப்பதற்கு 20 நாட்களாகும். இரவில் மட்டுமே இந்த பூ மலர்ந்திருக்கும், காலையில் வாடிவிடும்.
உடுமலை அருதே தேவனுார்புதுார், விநாயகர் கோவில் வீதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், இந்த பூ நேற்று பூத்திருந்தது. அப்பகுதி மக்கள் பூவை கண்டு ரசித்தனர்.