ADDED : ஜூலை 07, 2025 04:37 AM
பெருந்துறை: புதியதாக துவக்கப்பட்ட 'தமிழக நீதிக்கட்சி' அறிவிப்பு நிகழ்ச்சி பெருந்துறையில் நேற்று நடந்தது. கட்சி துவக்க விழா மற்றும் கொள்கை விளக்க மாநாடு, வரும், 20ம் தேதி நடக்கிறது. இதற்-காக மாநாட்டு திடல் அமைக்க பூஜை, விஜயமங்கலம்- டோல்கேட் அருகே- விஜயபுரி அம்மன் கோவில் இடத்தில் நடந்-தது. நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர் சரவணன் என்கிற வாழவந்-தியர் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் தென்னிலை, கொங்குநாடு வேட்டுவகவுண்டர் சங்க தலைவர் மதிவாணன், கோபி, சிறுபான்மை நலக்குழு கூட்-டமைப்பு தலைவர் ரவிகுமார், -'தமிழக நீதிக்கட்சி' மாநில தலைவர் கரூர் ஜெகன், மாநில செயலாளர் கரூர் பாஸ்கர், மாநில பொருளாளர் திருப்பூர் சசி, உழைப்பாளர் உழைக்கும் மக்கள் கட்சி கரூர் தேக்கமலை உள்ளிட்டோர் கலந்து கொணடனர்.ஆற்றில் சடலமாக மிதந்தவர்
சத்துணவு அமைப்பாளர்
டி.என்.பாளையம், ஜூலை 7
பங்களாப்புதுார் அருகே நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்றில், 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதந்தது. பங்களாப்புதுார் போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். இதில் டி.என்.பாளையம் அரு-கேயுள்ள கொங்கர்பாளையம், அண்ணா வீதியை சேர்ந்த வெள்ளி-யங்கிரி மனைவி சரஸ்வதி, 47, என்பது தெரியவந்தது. வினோபா நகர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி சத்துணவு அமைப்பாளர். கடன் பிரச்னை இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆற்றில் குதித்து தற்-கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.