/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை மந்தம்
/
மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை மந்தம்
ADDED : ஆக 19, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடி மாத விசேஷங்கள் காரணமாக,தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில், மீன் விற்பனை மந்தமாகியிருந்தது. கடந்த வாரம், 35 முதல், 40 டன் மீன் விற்பனையானதால், மீன் வியாபாரிகள் சற்று ஆறுதல் அடைந்தனர். நேற்று கூடிய மார்க்கெட்டுக்கு, மீன் வரத்து குறைந்தது. அதிகளவில் வாடிக்கையாளர்களும் வரவில்லை.
மீன் வியாபாரிகள் கூறுகையில், 'தொடர் மழை, கடலோர மாவட்டங்களில் இயல்பான சூழல் இல்லாததால், மீன் வரத்து குறைந்துள்ளது. முழுமையாக கேரள மீன்களை நம்பியே விற்பனை உள்ளது. நேற்று, 30 டன் கடல் மீன், 25 டன் அணை மீன்கள் வந்தன. விற்பனை மந்தம் என்பதால், கடந்த வார விலையே தொடர்ந்தது,' என்றனர்.