ADDED : நவ 02, 2025 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுவாய் சந்தை கடை ரோடு பகுதியில் ஏராளமான குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது. அந்த இடத்திலேயே சமுதாய உறிஞ்சு குழி உள்ளது. கோட்டைமேடு பகுதியில் சேகரமாகும் கழிவு நீர் அனைத்தும் உறிஞ்சு குழிக்கு வருகிறது. ஆனால் அதை சரிவர பராமரிக்காததால் தண்ணீர் பூமியில் இறங்காமல் பெரும் பகுதி ரோட்டில் வழிந்தோடுகிறது. ரோட்டை கடக்கும் பொதுமக்கள் கழிவு நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தேங்கி நிற்கும் கழிவுநீரிலிருந்து ஏராளமான கொசுக்கள் உருவாகி பொதுமக்களை பதம் பார்க்கிறது. குடியிருப்புகள், கடைகள், வாரச்சந்தை ஆகியவை உள்ள இடத்தில் கழிவுநீர் தேங்குவது பொதுமக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கி இருக்கிறது. கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் நோய் அபாயத்தில் உள்ளனர்.

