/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாளியில் துாக்கி வந்த அவலம் பாம்பு கடித்தவர் நிலை அபாயம்
/
துாளியில் துாக்கி வந்த அவலம் பாம்பு கடித்தவர் நிலை அபாயம்
துாளியில் துாக்கி வந்த அவலம் பாம்பு கடித்தவர் நிலை அபாயம்
துாளியில் துாக்கி வந்த அவலம் பாம்பு கடித்தவர் நிலை அபாயம்
ADDED : ஜன 11, 2025 01:23 AM

உடுமலை:ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு, சாலை, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. குருமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த, பழனிசாமி மகன் சரவணன், 30, திருமூர்த்திமலைக்கு வந்து, மளிகை பொருட்களை வாங்கி விட்டு, கருஞ்சோலை வனப்பகுதி வழியாக நேற்று சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பாம்பு கடித்ததில் உயிருக்கு போராடினார். உடனடியாக, மூங்கில் மரத்தில், போர்வையில் தொட்டில் கட்டி, மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர்கள், கரடு, முரடான மலைப்பாதையில், ஏழு மணி நேரம் துாக்கி வந்து, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பிறகும், அவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.