/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி 68,000 டோஸ் செலுத்த இலக்கு
/
கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி 68,000 டோஸ் செலுத்த இலக்கு
கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி 68,000 டோஸ் செலுத்த இலக்கு
கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி 68,000 டோஸ் செலுத்த இலக்கு
ADDED : பிப் 07, 2024 12:54 AM

உடுமலை:உடுமலை பகுதியில், ஆங்காங்கே முகாம் நடத்தி, நாட்டுக்கோழிகளுக்கு, 68 ஆயிரம் டோஸ் வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், கால்நடை வளர்ப்பு, பிரதான தொழிலாக உள்ளது. அதில், பொருளாதாரத்தை எளிதில் மேம்படுத்தும் வகையில், பலர், நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாக, நாட்டுக்கோழிகளை தாக்கும் வெள்ளை கழிச்சல் நோயை தடுக்கும் வகையில், தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, வாரம்தோறும், சனிக்கிழமை, கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களில் கோழிகளுக்கு, வெள்ளை கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த நோய், கோடை காலங்களில், கோழிகளில் அதிக இறப்பை உண்டாக்கும் என்பதால், தமிழக அரசால், பிப்., 1 முதல் 14ம் தேதி வரை, கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாமும் நடத்தப்படுகிறது.
அவ்வகையில், உடுமலை பகுதியில், ஆங்காங்கே முகாம் நடத்தி, 68,000 டோஸ் வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயப்பட்டுள்ளது.
எலையமுத்துார் மற்றும் கல்லாபுரம் கால்நடை மருந்தக பகுதிகளில் கால்நடை டாக்டர் ராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவினர், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்தினர். முகாமை, கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் ஜெயராமன், பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: வெள்ளை கழிச்சல் நோய், வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. இதன் விளைவாக, பருவமடைந்த கோழிகளில் மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, கண் சவ்வு அழற்சி, பக்கவாதம் மற்றும் பாதிக்கப்பட்ட கோழிகள், ஓரிரு நாட்களில் இறந்துவிடும்.
இளம் கோழிகளில் மூச்சுத்தடை, வயிற்றுப்போக்கு, பக்கவாதம் உற்பத்தி திறன் குறைவு மற்றும் அதிக அளவில் இறப்பு விகிதம் காணப்படும்.
எனவே, விவசாயிகள் தங்கள் கால்நடை மருந்தக பகுதிகளில் நடைபெறும் முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு மாதங்களுக்கு மேற்பட்ட நாட்டுக்கோழிகளுக்கு, வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பு ஊசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

