/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்கள்
/
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்கள்
ADDED : மார் 01, 2024 12:14 AM
- நமது நிருபர் -
திருப்பூரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர், 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது.
அந்த இயக்கத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில், 300 பேர் திரண்டனர். கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி, இடை நிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கவேண்டும்; சென்னையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை கைது செய்வதைக்கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து, தடையை மீறி, முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக, கலெக்டர் அலுவலக நுழைவாயிலைக்கடந்து உள்ளே செல்ல முயன்றனர். இதையடுத்து, 300 பேரை கைது செய்த போலீசார், பெரிச்சிபாளையத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்கவைத்தனர்; மாலையில் விடுவித்தனர்.

