/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் விளையாட்டு: கலாம் கோப்பை வென்ற அணி வீரர்கள் உற்சாகம்
/
நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் விளையாட்டு: கலாம் கோப்பை வென்ற அணி வீரர்கள் உற்சாகம்
நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் விளையாட்டு: கலாம் கோப்பை வென்ற அணி வீரர்கள் உற்சாகம்
நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் விளையாட்டு: கலாம் கோப்பை வென்ற அணி வீரர்கள் உற்சாகம்
ADDED : நவ 17, 2025 01:21 AM

'நி ப்ட் டீ' கல்லுாரியுடன் 'தினமலர்' நாளிதழ், டெக்னோ ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியன இணைந்து, திருப்பூர், முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லுாரியில், அப் துல் கலாம் நினைவு சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஏழாவது ஆண்டாக நடந்த தொடரின் இறுதிப்போட்டியில், சி.ஆர்.கார்மென்ட்ஸ் ஈகிள்ஸ் அணி வென்று கோப்பையைத் தட்டிச்சென்றது.
இந்த அணியின் பழநி முருகன் 35 ரன்கள்; 3 விக்கெட்கள்; கேப்டன் ஆல்பர்ட் 4 விக்கெட்கள்; வினீத் 55 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினர். பழநிமுருகன் ஆட்டநாயகனாகத் தேர்வானார். இந்த அணி நான்காவது முறையாக இந்தக்கோப்பையை வென்றுள்ளது.
புதிய அனுபவம் பழநிமுருகன், ஆல்-ரவுண்டர்:
பனியன் நிறுவன அணிக்காக, நான்கு ஆண்டுகளாக விளையாடுகிறேன்; ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. கிரிக்கெட் அடித்தளமே, ஆர்வம் தான். போட்டி முடியும் வரை முழுமையாக விளையாட வேண்டும். வேலையும் முக்கியம்; அதே நேரம், ஆட்டமும் முக்கியம். எனது நிறுவன உரிமையாளர் முருகேசன் தினமும் ஒரு மணி நேரம் பயிற்சிக்கு அனுமதி அளித்தார். ரசிகர்கள் கைதட்டல் இல்லையெல் கிரிக்கெட் இல்லை. குரு இருந்தால் தான் எல்லாருக்கும் வெற்றி கிடைக்கும்.
வாழ்க்கை தந்தது ஆல்பர்ட், கேப்டன்:
கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள நிறுவனத்தில் இணைந்ததால், எனக்கு வேலை கொடுத்து, படிக்கவும் வைத்தனர். நிப்ட்-டீ கல்லுாரியில் தான் படித்தேன். சிறிய யூனிட்டில் பேக்கிங்கில் வேலைக்கு சேர்ந்தேன். இன்று, எட்டு யூனிட்டுக்கும் பொறுப்பாளராக உள்ளேன். கிரிக்கெட் தான் வாழ்க்கை தந்தது. தினசரி விளையாடுவோம். பயிற்சி எடுப்போம்.
விடுமுறை கொடுத்து, விளையாட அனுமதிப்பர். தனி மைதானம் உள்ளது. கிரிக்கெட்டில் இருந்ததால், ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. நிறுவனம் வழங்கிய ஒத்துழைப்பால் தான்; சாத்தியமானது வெற்றி.
நல்வாய்ப்பு வினீத், பேட்ஸ்மேன்:
ஒழுக்கத்தை, நேர்மறை எண்ணங்களை கிரிக்கெட் கற்றுக்கொடுத்தது. நாங்கள் பணியாற்றும் நிறுவனம் நல்ல வாய்ப்பு கொடுத்தது. பணம் சம்பாதித்து விடலாம்; பெயரை சம்பாதிக்க முடியாது. எனக்கு நல்ல பெயரை எங்கள் நிறுவனமும், கிரிக்கெட்டும் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. ஏழு பிரிமியர் லீக் போட்டியிலும், எங்கள் நிறுவனம் பங்கேற்றுள்ளது. இதில், நான்கு முறை எங்கள் அணி கோப்பையை கைப்பற்றியது. இரண்டு முறை கோப்பை கைப்பற்றிய அணியில் நான் இடம் பெற்றேன். ஒட்டுமொத்த அணிக்கு நிர்வாகம் நல்ல ஒத்துழைப்பு தந்தது. வெளியே தெரியாத முகங்களாக இருந்தோம்; கிரிக்கெட் மூலம், மக்களுக்கு தெரியும் முகமாக மாறிவிட்டோம்.

